உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நெஞ்சுக்கு நீதி தாகவும் அந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழு ஏற்றுக் கொள்ளா விட்டால் அவர் பொது மக்கள் முன்னால் சென்று - பிரச்னையை எடுத்து வைத்துக் கழகத்தைச் சந்திப்பேன் என்றும் பேச் யிருக்கிறார். அவருடைய இந்தப் போக்கு, கழக அமைப்பையும் பொதுக்குழுவையும் நமது ஜனநாயக முறையையும் இழிவு படுத்துவதாக உள்ளது. ஆகவே கழகக் கட்டுப்பாட்டைச் காப்பாற்றவும் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர் மீது உடனடியாகத் தக்க நடவடிக்கையை எடுக்கட் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்." -இந்த முறையீட்டில் கையெழுத்திட்டவர்கள் திரு.டி.கே. சீனிவாசன், திரு. மதுரை முத்து, திரு,ஈ.ஆர்.கிருஷ்ணன் திரு.க.ராசாராம், திரு.ப.உ.சண்முகம், திரு. கே. டி. எஸ் மணி, திரு. நீலநாராயணன், திரு. எஸ்.ஏ. இராசமாணிக்கம் திரு.எம்.செல்வராஜ், திரு. எச். எல். முருகேசன், திரு. தோப்பூர் திருவேங்கடம், திரு. எஸ். எஸ். தென்னரசு, திரு. அழகிய நம்பி திரு.எம்.எஸ். வெங்கடாசலம், திரு. இரா. இராசன், திரு. சாதிக் பாட்சா, திருமதி. சத்தியவாணிமுத்து, திரு: க.அன்பழகன் (பேராசிரியர்) திரு. அன்பில் தர்மலிங்கம், திரு. மன்னை நாராயணசாமி, திரு.என்.வி.நடராசன். திரு.பரூக் மரைக் காயர் (புதுவை முதல்வர்), திரு.ஏ.வி. பி. ஆசைத்தம்பி, திரு. து. ப. அழகமுத்து, திரு. காஞ்சி கல்யாணசுந்தரம் திரு.சி.வி.எம். அண்ணாமலை ஆகியோர் ஆவார்கள். முறையீட்டை எங்களிடம் அளித்ததோடு மாத்திர மல்லாமல் உடனடியாக எம். ஜி. ஆர். அவர்களைக் கழகத்திலி ருந்து அறவே விலக்க வேண்டுமென்றும் செயற்குழு உறுப்பினர் களின் பெரும் பகுதியினர் வாதாடினார்கள். சூடு பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே நாவலர் அவர்களும், திரு.என்.வி. என். அவர்களும் ஓர் அறிக்கையை சுருக்கமாகத் தயாரித்து எங்களிடம் படித்துக் காட்டினர். "தலைமைக் கழகப் பொருளாளர் எம். ஜி. ஆர். அவர்கள், அண்மைக்காலத்தில் கழகக் கட்டுப்பாடுகளை மீறியும், கழகத் திற்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம் செயல்பட்டு வருவதால் அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பிலிருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உட்பட எல்லாப் பொறுப்புக் களில் இருந்தும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.