உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 நெஞ்சுக்கு நீதி கழகங்கள் என்று அவர் எத்தனை கிளைக் கணக்கு கேட்டிருப்பாரேயானால், துணைப் பொதுச் செயலாளர் என்.வி.என் மற்றொரு துணைச் பொதுச் செயலாளரான ராசாராம் அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து 18 ஆயிரம் கிளைக் கழகங்கள், 135 வட்டக் கழகங்கள் 14 மாவட்டக் கழகங்கள், இவை தவிர மாநில அமைப் புகள், செயற்குழு, பொதுக்குழு இப்படிப்பட்ட அமைப்பு ரீதியில் செயல்படுவதுதான் தி. மு. கழகம். ' எம்.ஜி.ஆர். "நான் கேட்ட கணக்கு எதற்காகத் தெரியுமா? எதிர்க் கட்சிக்காரர்கள் புகார் சொல்கிறார்கள், அதற்காகத்தான் நான் கணக்கைக் கேட்கிறேன்" என்றார். இதோடு நிறுத்தியிருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன். அடுத்து அவர் "அனைவரும் சொத்துக் கணக்கு வைக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் கேட்பேன்; அதற்கொரு தீர்மானம் கொண்டு வருவேன். அந்தத் தீர்மானம் நிறை வேற்றப்படாவிட்டால் பொது மக்களைச் சந்திப்பேன்" என்றார். இதற்கு என்ன பொருள்? எம்.ஜி.ஆருக்காகப் பரிந்து பேசுகிற காங்கிரஸ்காரர்களை மற்றக் கட்சிக்காரர்களைக் கேட்கிறேன். உங்கள் பொதுக்குழு விற்கு ஒரு தீர்மானத்தை ஒருவர் கொண்டு வந்து - அது நிறைவேறா விட்டால் பொது மக்களைச் சந்திப்பேன் என்று உங்கள் கட்சியிலே உள்ள ஒருவர் சொன்னால் அவர்களைச் சீராட்டிப் பாராட்டுவீர்களா? அல்லது உங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றுவீர்களா? இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். 18 ஆயிரம் கிளைக் கழகச் செயலாளர்களின் கணக்கு களையும் கொண்டு வந்து பொதுக்குழுவில் வைப்பது என்றால் அது எவ்வளவு உயரம் இருக்கும்? அவ்வளவையும் ஆராய்வது என்றால் அது நடக்கின்ற காரியமா? நடைமுறைக்கு ஒத்து வரக் கூடிய செயலா? இது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்கு தெரியும். தெரிந்தும் கேட்டார், ஏன்? அவருடைய எண்ணம் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இரண்டிலே ஒன்றை விரும்பினார். அவர் விரும்பினார் என்பதற்கு ஒரு சாட்சி - அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 26 செயற்குழு உறுப்பினர் கள் மனு கொடுத்து சொன்ன நேரத்தில் கண்கள் குளமாக எங்கள் நா தழுதழுக்க ஒருவரோடு ஒருவர் உரையாடி வேதனை