உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 389 நடத்தப்படுமென்றும் அக்டோபர் 31-ஆம் நாள் செய்தியாளர் களிடம் எம். ஜி. ஆர். தெரிவித்தார். அந்தக் குற்றச்சாட்டுக் களை விசாரிக்க மத்திய சர்க்கார் ஒரு கமிஷனை அமைக்க வேண்டுமென்று செய்தியாளர்களிடம் கூறிய எம்.ஜி.ஆர்., "இந்தியாவில் எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டு, சுமத்தப்பட்டால் அதுபற்றி நீதி விசாரணை நடத்தும் அதிகாரம் மத்திய சர்க்காருக்குத் தான் இருக்கிறது" என்றும் குறிப்பிட்டார். 6 அவரைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு கருத் தறிவித்த திரு. எம். கல்யாணசுந்தரம் அவர்கள், "நாங்கள் கவர்னரிடம் கொடுக்கப் போகிற ஊழல் புகார் பட்டியலில் கருணாநிதியும் இடம் பெற்றிருக்கிறார். எனவே கருணாநிதி ஒரு நல்ல மரபை ஏற்படுத்த வேண்டும். விசாரணை முடிந்து தீர்ப்புக் கிடைக்கும் வரையில் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை நேர்மையாகவும் நிர்ப்பந்தத்திற்கு இடமில்லாமலும் நடைபெறும். மல்ல; கருணாநிதியின் ஆசி பெற்றவர் யாரும் முதலமைச்சராக இருந்து விசாரணை நடத்துவதற்கும் நாங்கள் ஒரு போதும் சம்மதியோம்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அது மட்டு அக்டோபர் 14-ந் தேதி கழகப் பொதுக்குழுவுக்கு எம்.ஜி.ஆர். அனுப்பிய தந்தியில் "கழக அமைச்சர்கள் ஊழல்கள்" என்பது குறித்து எதுவுமே பேசவில்லையென்று அவர் குறிப்பிட்டிருந்தமைக்கு மாறாக, அதே திங்கள் இறுதியில் திடீரெனப் புகார்ப் பட்டியல் தயாரித்து விட்டார் என்றால் அதிலே அடங்கிக் கிடக்கும் மர்மம் எளிதில் புரியும். கவர்னரிடம் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் மூலம் சில பைல்'கள் அரைகுறையாகத் தயாரிக்கப்பட்டு, அடிப்படையாகக் கொண்டு ஆதாரமற்ற புகார்கள் எழுதப் அவற்றை பட்டு - அதைக் வழங்கும் கருவியாக எம்.ஜி.ஆர். பயன்படுத்தப்பட்டார். அதனால் தான் அவர் திரும்பத் திரும்ப அந்தப் புகார்களைப் பற்றித் தனக்கு நேரடியாக எதுவும் தெரியாது என்று வாக்குமூலங்கள் அளித்து வந்தார். நவம்பர் 4-ஆம் நாள் எம்.ஜி.ஆரும், எம். கல்யாண சுந்தரமும் புகார்ப் பட்டியல்களை எடுத்துச் சென்று கவர்னர் கே. கே. ஷா அவர்களிடம் கொடுத்தனர். அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கக் கோரினர். கவர்னர்,