உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 423 அமைச்சர் நாவலர் அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம், அமைச்சர்கள் ஆதித்தனார், ப.உ.சண்முகம், மணலி கந்தசாமி, எஸ். எஸ் தென்னரசு, தூத்துக்குடி சிவசாமி எம்.பி., ஆற்காடு வீராசாமி எம்.எல்.ஏ.,கா. மு. கதிரவன் எம்.எல்.ஏ., மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அந்த விழாவில் கலந்து கொண்டார்கள். கட்டபொம்மன் கோட்டை திறப்பு விழாவிற்கு முன்பு லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றுக் காவியங்கள் அலங்கார ஊர்திகளில் கொண்டு வரப்பட்டன. இந்த மாபெரும் ஊர்வலத்தினை. கட்டபொம்மன் கோட்டை வாயிலின் முன்பு அமைக்கப் பட்டிருந்த மேடையிலிருந்து நாங்கள் எல்லாம் பார்வை யிட்டோம். ஊர்வலம் கோட்டையை அடைந்ததும், அங்கே அமைக்கப்பட்ட கட்டபொம்மனின் சிலையினை நான் திறந்து வைத்தேன். கோட்டை எழுப்புவதற்கும், அந்த இடத்தினை செப்பனிடுவதற்கும் ஏழு லட்ச ரூபாய் செலவாயிற்று. கட்டபொம்மன் குல தெய்வமான ஜக்கம்மா ஆலயத்தின் சார்பில் எனக்கும் அமைச்சர்களுக்கும் மாபெரும் வரவேற்பளிக் கப்பட்டது. விழா மேடையிலேயே கட்டபொம்மனின் வழித் தோன்றல்களான இருநூறு பேர்களுக்கு நிலப்பட்டா, மனைப் பட்டா வழங்கப்பட்டது. வீரபாண்டியனின் வாரிசுகள் சார்பில் வையப்ப நாயக்கர் அவர்கள் எனக்கு வீரவாள் ஒன்றை பரிசாக வழங்கினார். கட்டபொம்மன் கோட்டையை சமைத்துத் தந்த சிற்பிகள் கணபதி, மாணிக்கம், சிதம்பரம், சுப்பையா ஆகியேருக்கு கணையாழியும், பொன்னாடையும் என்னால் அணி விக்கப்பட்டன. கட்டபொம்மன் கோட்டைக்கான அடிக்கல் நாட்டு விழா, திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகளில் ஒருசிலர் எடுத்துரைத்த கருத்துக்களில் முக்கியமான சில பகுதிகள் இந்த வரலாற்று ஏட்டில் இடம்பெறுவது நல்லது. குறிப்பாக அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், "மிகப்பெரிய திட்டங்களைப் போடும் போது, பழமொழி சொல்வார்கள், 'மனக்கோட்டை கட்டுகிறான்' என்று. கேலி செய்வதற்காகவே கோட்டை கட்டுகிறான் என்று சொல்லப்பட்ட