உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 451 "தமிழக சட்டமன்றத்தின் கடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊழல் விசாரணைச் சட்டம் தீவிரமானதும் நெடு நோக்குடையதாகும். ஆனால் என்னை வியப்பிலாழ்த்தியது என்னவெனில், எம். ஜி. ராமச்சந்திரனும் வேறு சிலரும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதானது ஏதோ ஊழலை மறைப் பதற்கென்றே செய்யப்பட்ட மாக்கியவல்லி நடவடிக்கை என்பதாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டதாகும். அவர்கள் இந்தச் சட்ட நகலை உன்னிப்பாகப் பரிசீலித் தார்களா? புரிந்து கொண்டார்களா? என்று நான் ஐயுறு கிறேன். 1969-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை முன் கொண்டு வரப்பட்டு பின்னர் என்ன காரணத்தாலோ மாநிலங் களவை முன் கொண்டு வரப்படாமல் காலாவதியாகும்படி விடப்பட்ட லோக்பால், லோக் அயுக்த் சட்ட நகலோடு தமிழக சட்ட நகலை அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. மத்திய சட்ட வரைவைக் காட்டிலும் சில வகைகளில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட வரைவு சிறப்புடைய தாகும். லோக்பால் மசோதா பிரதம மந்திரிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் வரம்பிலிருந்து விலக்களித்தது. தமிழக சட்டமோ முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை மேலவை ஆகியவற்றின் உறுப்பினர்களையும் அதன் வரம்புக்குள் சேர்த்துள்ளது. சட்டத்தில் சாத்தியமான அளவுக்கு நீதிபதிகளை நியமிப் பதற்கான ஏற்பாடு சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்கும்." அந்தச் சட்டத்தின் சிறப்பு பற்றி நானே கூறுவதைவிட சந்தானம் போன்றவர்கள் எழுதியிருப்பதிலிருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் இதை எழுதி யுள்ளேன். இறுதியாக பொதுக்குழு முடிவிற்குப் பிறகு 1973- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 - ஆம் தேதியன்று அந்த மசோதா தமிழகத்தின் இரண்டு சபைகளிலும் நிறைவேறியது. சட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்த்த ஜெயப் பிரகாஷ்நாராயண் அவர்கள் கழக அரசைப் பாராட்டியதோடு,