உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நெஞ்சுக்கு நீதி அதிர்ச்சி தரும் செய்தியென்று குறிப்பிட்டேனல்லவா அதுதான் என்னையே முதலமைச்சராக்க வேண்டுமென்று கழகத்தினர் முடிவெடுத்துக் கொண்டு என்னிடம் வந்த தாகும். மன்ற தமிழகத்தில் சோஷலிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒரு வராக இருந்தவரும், பின்னர் கழகத்தில் இணைந்து மொடக்குரிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக விளங்கியவருமான ஈரோடு சின்னச்சாமி அவர்கள் தலைமையில் ஒரு பெருங்குழு என்னை வளைத்துக்கொண்டது. பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்களின் தலைமையில் அந்தந்த மாவட்டங்களின் சட்ட உறுப்பினர்கள் என் இல்லத்திலேவந்து சூழ்ந்து கொண்டார்கள். அமைச்சர்களில் மதியழகன், சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, சாதிக்பாட்சா ஆகியோர் முதலமைச்சர் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக நாஞ்சில் கி.மனோகரன் (நாஞ்சிலார்) மற்றும் (நாஞ்சிலார்) மற்றும் கோவைசெழியன் ஆகியோரும் என்னை விட்டு அகலாமல் என்னருகில் இருந்து கொண்டே கட்சியைக் காத்திட இந்தப் பொறுப்பை சுமந்தே தீரவேண்டுமென்று வாதிட்டனர், வற்புறுத்தினர். எனக்கு - நாவலர்தான் முதலமைச்சர் எனக் கருதிக்கொண்டிருந்த அந்தப் புதிய திருப்பம், மிகப்பெரும் சோதனையாக அமைந்தது. என் வீட்டாரிடமும், குறிப்பாக என் மருமகன் முரசொலி மாறனிடமும் விளக்கமளித்து அவர்களை விட்டே என்னை ஒப்புக்கொள்ள வைக்கலாமென்று திட்டம் தீட்டினர். பெரும்பாலோரின் கருத்தை நிறைவேற்றாமல் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். என்னை அணுகி, இணங்கிடச்செய்ய முயற்சித்தார். மாறனும், வீட் டாரும் மறுத்தது மட்டுமல்ல; நாவலரே முதல்வராக வரவேண்டு மென அவர்களிடம் எடுத்துரைத்தனர். "அவரைச் சிக்கலில் வைக் காதீர்கள்! அவரை முதல்வராக ஆக்குவதை வீட்டில் யாரும் விரும்பவில்லை" என்று எனக்காக என் வீட்டில் உள்ளோர் அப்ாவரும் வக்காலத்து வாங்கினர். "யார் முதல்வராக வரவேண்டுமென்று பெரும்பாலோ ருடன் கலந்து பேசியபோது, கலைஞர்தான் வரவேண்டுமென்று சீனவரும் தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நானும், நீங்கள் ன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினேன். இத்தனைக்குப் பிறகும் அவர் சம்மதிக்கவில்லை. மாற அனுப்பி வைத்தார். கலைஞருக்கு முதலமைச்சர் பதவி