உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 நெஞ்சுக்கு நீதி இருக்குமென்பதை மறந்து விடக்கூடாது. ஜன நாயகத்திற்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும்" என்று கூறினேன். இந்திரா காந்திதான் நாட்டின் ஒரே தலைவர் என்று டெல்லி யில் பல இடங்களில் இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குகின்ற பணியினைச் செய்த போது சந்திரசேகர் எம்.பி., கிருஷ்ணகாந்த் எம்.பி., லெட்சுமிகாந்தம்மா எம்.பி. ஆகியோர் அதில் கையெழுத்துப் போட மறுத்து விட்டனர். டெல்லியிலிருந்து அவர் வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளோடு தனது 13-6-75 தேதியிட்ட தலையங்கத்தில், "இப்போ துள்ள சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் அப்பீல் முடிவாகும் வரை பிரதமர் பதவியிலிருந்து விலகி நிற்பதே திருமதி இந்திரா காந்தி எடுக்கக்கூடிய சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். இவ்வாறு செய்வதின் மூலம் நீதித்துறையின் செயல் முறையையும் இந்திய ஜன நாயகத்தையும், அவை எழுப்பப்பட்டுள்ள அடித் தளத்தையும் அவர் மேன்மைப்படுத்தியவராவார். திருமதி இந்திரா நாட்டுக்கு நல்லது செய்திருக்கலாம், நன்றி. காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் நன்றாக நீடிக்கக்கூடும். ஆனால் அது வேறுவிஷயம். அவரது தேர்தல் அப்பீல் விசாரணை யில் இருக்கும் போது அவர் தொடர்ந்து ஆட்சித் தலைமையிலும் இருக்க வேண்டும் என்பது வேறு. தலைக்கு மேல் கத்தி தொங்குபோது, அவர் பிரதமர் பதவியில் தொங்குவாரானால் செயல்படத் தேவையான திறமையோ, செயல்பட வேண்டு மென்கிற எண்ணமோ இல்லாமல் ஒரு தற்காலிக அரசின் தலைவ ராகவே அவர் இருக்க முடியும்" என்று எழுதியது. பிரஜைகளைப் ஸ்டேட்ஸ்மென்ட் ஏடு தனது தலையங்கத்தில் "அப்பீல் செய்து கொள்வது என்பது இதர இந்தியப் போலவே இந்திரா காந்தியாருக்குத் தரப்பட்டிருக்கிற விஷயம் என்றாலும்; அதற்கிடையில் இந்திரா காந்தியார், நாட்டிற்கும் இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிற ஜனநாயக முறைக்கும் நன்றிக் கடன் ஆற்ற வேண்டியிருக்கிறது. அதுதான் அவர் பதவியை ராஜினாமா செய்வதாகும். இப்போது ராஜினாமா செய்யாமல் இருப்பதன் மூலம் தேர்தல் சட்டத்தையே மீறிய குற்றத்தைவிட பெரிய குற்றத்தை இந்திரா காந்தியார் செய்தவ ராகிறார்" என்று எழுதியிருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் டெல்லியில் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவர் அவர்களின் இல்லத்திற்கு முன்னால் தொடர்ந்து