உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 நெஞ்சுக்கு நீதி அவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து திருத்தணி பொதுக்கூட்டத்தில் பேசியது அப்போது பழைய காங்கிரஸ் தினசரியான "நவசக்தி" பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. சுதந்திர இந்தியாவில் ஜன நாயகம் வீழ்ச்சியடைகிறது என்பதையும், தனது தேசீய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக் கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத அவர் உடல். நலிவுற்றுப் படுத்த படுக்கையானார். ஜூலை 4-ஆம் நாள் காலை நானும் கல்வி அமைச்சர் நாவலரும் காமராஜர் அவர்களைக் காண அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே சென்று அமர்ந்த என்னைக் கண்டதும் அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன். தழுவிக் கொண்டார். அவரது கண்கள் நீர்வீழ்ச்சிகளாயின. "தேசம் போச்சு! தேசம் போச்சு!" என்று உரக்கக்கூவினார். வாய்விட்டுக் கதறி கதறி அழுது விட்டேன். நாவலர் கண்ணீர் வடித்தவாறு எங்களிருவரையும் தேற்றினார். நான் அய்யா! நீங்கள் சொல்லுங்கள்! இப்போதே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுகிறோம்! இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த - சர்வாதிகாரத்தை அழிக்க - நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள்! உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயார்!" என்றேன். "பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஜன நாயகம் இருக் கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்" என்று. அவர் அறிவுரை கூறினார். நெருக்கடிநிலைப் பிரகடனத் தொடர்பாக பிரதமர் வானொலியின் மூலமாக இருபது அம்சத் திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டு மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் தெரியுமா? மராட்டிய முதல்வர் எஸ்.பி. சவான் "பிரதமரது இருபது அம்சத் திட்டம் உண்மை உணர்வுடன் அமுல்படுத்தப்படும்" என்றும் - கேரள முதல்வர் அச்சுத மேனன் 'இருபது அம்சத்தை உடனடியாக நிறைவேற்ற நிர்வாக இயந்திரத்தை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறோம். தேவையானால் அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றும்-கர்நாடக காங்கிரஸ்