உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 479 'நான் இப்படித் தான் முடுக்குவேன்' என்று முடுக்கினால், நாதம் எழுவதற்குப் பதிலாக நரம்பே அறுந்து விடும்! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலைமை இருக்கப் போகிறது? ஒரு வாரமா-ஒரு மாதமா-ஓராண்டுக் காலமா- அல்லது நீண்ட காலமா-புரியவில்லை? வில்லை! எங்கள் நிலை என்னவோ-புரியவில்லை! அதற்காக நாங்கள் திகைக்கவில்லை - வருத்தப்பட இன்றைக்கே ஒத்திகை பார்ப்பதைப் போலத் தான், நம்முடைய அமைச்சர்களெல்லாம், சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு நடந்து வந்தார்கள்; நான் தான் சொன்னேன்- 'எல்லாக் கார்களும் அங்கேயே நிறுத்தப்பட்டு, அமைச்சர்க ளெல்லாம் நடந்தே வரட்டும்-ஒத்திகை பார்க்கட்டும்' என்று! ஆகவே, இது எங்களுக்குப் பழக்கமான காரியம்! என்ன நடக்கப் போகிறது இந்தியாவில்? நாங்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்- 'இந்திரா காந்தி அம்மையார், காப்பாற்றுவார்கள் சர்வாதிகாரத்தின் எல்லைக்குச் செல்ல மாட்டார்கள்' என்று! ஜனநாயகத்தைக் - அந்த நம்பிக்கையோடு சொல்லுகிறேன் - இராஜாஜி இருந்தால் - 'ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுவார் ! 11 பெரியார் இருந்தால்- ‘இதை வைத்துப் புரட்சி நடத்துங் கள்' என்று சொல்லுவார். காயிதே மில்லத் இருந்தால்- 'நெருக்கடி நிலை தேவை யில்லை' என்று சொல்லியிருப்பார்! அண்ணா இருந்தால் என்ன சொல்லுவாரோ சொல்லுகிறேன் - இப்போது! - அதைச் இந்தக் கடற்கரையில் ஒரு சூளுரையைத் தமிழ்ப் பெருங் குடி மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். "எழுந்து நில்லுங்கள்"- (கடற்கரை வெண்மணற் பரப்பில் வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் எழுந்து நிற்கிறார்கள் மேடையிலுள்ள தலைவர்களும் நிற்கின்றனர்!) - எழுந்து