உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 நெஞ்சுக்கு நீதி துள்ள நாங்கள் சிறையில் உட்கார நேரிடும். நண்பர்களே, இந்தச் சிம்மாசனத்திலுள்ள மகிழ்ச்சியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான மகிழ்ச்சியைத் தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும், சிறைச்சாலைகளும் நல்ல இலட்சியங்களை அழித்துவிட முடியாது. இலட்சியங்களைத் சிறையில் பூட்டப்பட்டவர், வெளியே வரும் நேரத்தில் துறந்துவிட்டு வெளியே வரமாட்டார். இன்னும் வேகமாக சுறுசுறுப்பாக வெளியே வருவாரே தவிர சிறையில் போட்டுவிட்ட காரணத்தால்-ஆட்சி கவிழ்க்கப் பட்டுவிட்ட காரணத்தால் - அந்த இயக்கம் தடைபடுத்தப் பட்ட காரணத்தால் சோர்வடைய மாட்டார். இந்த இயக்கத்தை தாறுமாறாக அவசரப்பட்டு எவராவது தடை செய்வார்களானால் - இந்த இயக்கத்தால் நடத்தப்படுகிற ஆட்சி கலைக்கப்படுமானால் நட்டம் எங்களுக்கல்ல. தற்காலிகமான லாபம் யாருக்காவது கிடைக்கலாம். ஆனால் நீண்ட கால லாபம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான்.' இவ்வாறு கரூர் விழாவில் நான் பேசினேன். இத்தகைய நிலையில் இந்தியாவின் பெரும் பெரும் தலைவர் கள் எல்லாம் சிறையில் இருந்தபோது டெல்லியில் ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது. மக்கள் அவையில் அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களும், மாநிலங்கள் அவையில் அமைச்சர் கே. பிரம்மானந்தரெட்டி அவர்களும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தது சரிதான் என்று தெரிவித்து தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். தி.மு.கழகத்தின் சார்பில் இரா. செழியன் அவர்களும், எஸ்.எஸ். மாரிசாமி அவர்களும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றினர். முடிவில் அந்தக் கூட்டத் தொடரில் மாட்டோம் கலந்துகொள்ள அறிவித்துவிட்டு தி.மு.கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம், பழைய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஜூலை 22-ஆம் தேதி வெளிநடப்புச் செய்தன. என்று கி இந்தியா, பூராவும் இப்படிப்பட்ட குழப்பத்திற்கு ஆளாக யிருந்த நேரத்தில் தமிழக அரசில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எனதருமை நண்பர் என். வி. என். அவர் கள் இரண்டு மாத காலம் சென்னை பொது மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அந்த இரண்டு மாத காலமும், நானும் தமிழக அரசின் ஏனைய அமைச்சர்களும், காலை,மாலை இரண்டு வேளையும் பொது மருத்துவமனையிலேயே