உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 நெஞ்சுக்கு நீதி மருத்துவமனையில் இருந்த இருந்த அனைவரும் கண்ணீர் கொட்டி நின்றோம். பிறகு என்னைப் பார்த்து "நான் ஏதாவது என்னை அறியாமல் எப்போதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவரைவிட பதினோரு வயது இளையவனான என்னைப் பார்த்துச் சொன்னபோது என் கண்ணீரைத் தடுக்க என்னால் இயலவே இல்லை. . உடல்நலக் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறைவோடு இருந்த நிலையிலும் என். வி. என். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். காரை விட்டு இறங்க முடியாத அளவிற்கு அவரும் உடல் நலம் இல்லாமல் இருந்தார். காரின் அருகே என்னை அழைத்து எனக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றார். மற்றும் தமிழகத்திலே உள்ள உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி அவர்களும், ஆளுநர் அவர்களும் என். வி. என். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். என்.வி.என். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்து காரிலிருந்து இறங்கக்கூட முடியாத நிலையில் என்னை அழைத்து தனது வருத்தத்தைத் தெரிவித்து விட்டுச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அதற்குப் பிறகு இரண்டு மாத காலமே உயிரோடு இருந்தார். அக்டோபர் மாதம் 2-ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளையொட்டி காலையில் நானும் கவர்னர் கே.கே.ஷா அவர் களும், அமைச்சர் பெருமக்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, கட்சி அலுவலகத்திற்குச் சென்று புதுக்கோட்டை மாநாடு சம்பந்தமாக கலந்துரையாடி விட்டு, இரண்டு மணி அளவில் தான் வீடு திரும்பி சாப்பிட்டு விட்டு படுத்தேன். சுமார் 3 மணி அளவில் இன்று சென்னை நகர காவல்துறை கமிஷ்னராக இருக்கும் ஸ்ரீபால் அவர்கள் எனக்கு போன் செய்து காமராஜர் அவர்களுடைய உடல்நிலை சரியில்லை என்றும் கவலைக்கிடமாக இருக்கிறதென்றும், மருத்துவர்கள் விரைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். நான் அவரிடம் உடனே அவருடைய இல்லத்திற்கு நான் செல்வதாகக் குறிப்பிட்டேன். உடனே போன் செய்து அமைச்சர் ராஜாராமை வரச் சொன்னேன். அவர் சில நிமிடங் களில் விரைந்து வந்தார். நான் சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்க முற்படுவதற்கும், காமராஜர் மறைந்து விட்டார் என்கிற தகவல் காவல்துறையினர் மூலமாக எனக்கு வருவதற்கும்