உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 491 ☐ தாகும். கழகம் மாநில சுயாட்சி என்று குரல் கொடுக்கும்- போது அதனை வேண்டுமென்றே பிரிவினை வாதமெனக் கூறி திசை திருப்ப டெல்லியில் உள்ளவர்கள் முயலுகிறார்கள். எனவே விரைவில் நானே (காமராஜரே) அந்தக் கொள்கையை முன்வைத்து நாடு தழுவிய அளவுக்குக் கோஷம் கொடுக்கப் போகிறேன். அதற்கான ஆரம்ப வேலைகளை ஆந்திராவில் தொடங்குமாறு சஞ்சீவி ரெட்டியிடமும் கூறியிருக்கிறேன் என அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் அந்தக் காரியத்தை முன்னோடியாக நின்று முடுக்கி விட முடியாமல் அவர் வாழ்வை முடித்துக் கொண்டார். ஆம்; விடுதலை பெற்ற நாட்டில் சுதந்திர மில்லாமல் வாழ்வதை எண்ணி -- அந்த விடுதலை பெற்றுத் தந்த வித்தகன் காந்தி பிறந்த நாளிலேயே காமராஜர் கண் மூடிவிட்டார். அவரது நினைவைப் போற்றும் வண்ணம் நினைவகம் எனும் எழில் மண்டபம் கட்டியது மட்டுமல்ல; விருதுநகரில் அவரது பிறந்த இல்லத்தையும் அவரது நினைவுச் சின்னமாக கழக அரசு மாற்றியமைத்தது. காமராஜர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடும் முயற்சிக்கும் கழக அரசு மத்திய அரசைத் தூண்டிக் கடிதம் எழுதியது. கழக அரசு எந்த அளவிற்கு காமராசரை இழந்த துயரில் பங்கு கொண்டது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு சொல்ல-வேண்டுமேயானால் காமராஜரின் நெருங்கிய நண்பரும், மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான ராஜாராம் நாயுடு அவர்கள் அப்போது மேலவையிலே பேசியதை நினைவூட்டுவது மிகப் பொருத்தமாகும். அது வருமாறு:- "காமராஜர் மறைந்த அன்று -என்னால் எங்கு பேசினாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது-நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் அவர்களும், கல்வி அமைச்சர் அவர் களும், மற்ற அமைச்சர்களும் அங்கு வந்து, அவர்களுடைய சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டதைப் போல அந்த இடத்தில் தோற்றம் அளித்தார்களே தவிர, மற்றொரு கட்சித் தலைவர் இறந்தார் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரிய வில்லை. எங்களைக் கட்டிப்பிடித்து முதலமைச்சர் அன்று துக்கம் தெரிவித்ததும், அழுததும்!என்னுடைய உயிர் உள்ள அளவும் மறக்க முடியாது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர்கள் காட்டினார்கள். தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து அன்று அரசு