உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 495 ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவிலே குடியரசுத் தலைவராக இருந்த சஞ்சீவரெட்டி அவர்கள் இவ்வாறு மனந்திறந்து பேசினார். சஞ்சீவரெட்டி அவர்கள் காமராஜரின் இறுதிக் கால நினைவுகளைப்பற்றி இப்படிக் கூறியபோதிலும், அக்டோபர் மாதம் 5-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற காமராஜர் இரங்கல் கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி அம்மையார் "காமராஜர் மறைவதற்கு முன்பாக கடைசி இருமாதங்களில் புதுக் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிவர மிகவும் விரும்பினார். இதுசம்பந்தமாக நானும் அவரும் அந்தச் சமயத்தில் பலமுறை செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். காமராஜரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டியது நம்முடைய கடமை. நாட்டில் ஒழுக்கம், கடும் உழைப்பு ஆகியவற்றை மக்களிடம் ஏற்படுத்த அவசர நிலைமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை காமராஜரின் கட்சியினர் எதிர்த்தார்கள். ஆனால், அவசர நிலைமையின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் காமராஜர் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஏனெனில் நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சினை கள் அவருக்குத் தெரியும்" என்று கூறினார். காங்கிரசுடன் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திரா இணைந்துவிட வேண்டுமென்று துடித்த பழைய காங்கிரஸ்காரர் களிலே ஒரு பகுதியினர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையையும், மிசா சட்டத்தையும், தேசத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் மிகக் கடுமை யாகக் கண்டித்துப் பேசிய கருத்துக்கள் காமராஜரின் வலக்கரம் போல் இருந்து செயல்பட்ட "நவசக்தி" நாளிதழிலேயே வெளி வந்ததை மறந்துவிட்டார்கள் என்றே கூறலாம். இல்லாவிட்டால் "காமராஜர் நெருக்கடி நிலையை எதிர்த்து ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை' என்று அக்டோபர் 5-ஆம் நாள் டெல்லியில் இந்திராகாந்தி அவர்கள் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டி ருப்பார்களா? "எமர்ஜென்சி"யை எதிர்ப்பதில் காமராஜர் தீவிரமாக இருந்தார் என்பதை உணர்ந்திருந்த பழைய காங்கிரஸ்காரர் களில் ஒருபகுதியினர், இந்திரா காங்கிரசுக்குச் சென்றால் பதவி, பவிசுகள் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும்கூட காமராஜரின் கொள்கைக்கு விரோதமாக நடப்பதற்குத் தங்கள் மனச்சாட்சி இடம்தரவில்லை என உறுதியாகக் கூறிவிட்டனர்.