உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 நெஞ்சுக்கு நீதி "திராவிட முன்னேற்றக் கழகம் 1957 முதல் சட்டப் பேரவையிலும், சட்டமன்றத்திலும் (மேலவை), நாடாளுமன்றத் திலும், மாநிலங்கள் அவையிலும் எதிர்க்கட்சியாசச் செயல் பட்டு 1967 முதல் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகும். எதிர்க்கட்சியாக தி.மு. கழகம் செயல்பட்ட போது டெல்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, பாராளுமன்ற முறை ஜனநாயகத்திற்கு ஒருசிறிதும் பழுது ஏற்படாத வகையில் ஆட்சியின் முற்போக்குத் திட்டங்களை வரவேற்றும் குறைகளை, குற்றங்களைக் கண்ணியத்துடன் சுட்டிக்காட்டியும் தன்னுடைய கடமையை ஆற்றி வந்திருக்கிறது. . அந்த அடிப்படையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் கழக நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம், தனது எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டுமென்று இன்றுள்ள அரசியல் நிலை குறித்து கழகம் தனது கருத்தைத் தொடர்ந்து ஆட்சி மன்றங் களிலும், மக்கள் மன்றங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளது. விவாதித்தது. மேலும் நமது கழகத்தின் கருத்தை நமக்கே இயல்பான அரசியல் பண்பாட்டுடன், நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டங்களில் எடுத்து வைப்பது என்றும் - பாராளுமன்றத்தில் எழுகின்ற பிரச்சினைகளின் அடிப்படையில் உடன்பாடுள்ள மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புடன் கருத்துக்களைத் தெரிவிப்பது என்றும் - கழகத்தின் கொள்கைகளை, இலட்சியங்களைப் பொறுத்து நமது தனித்தன்மையை எப்போதும் போல் கட்டிக்காத்து வருவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநில மாநாட்டில் நான் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு-'தமிழகம் குடியரசு தலைவர் ஆட்சியை விரும்பவில்லை; தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தி அனுப்பப்பட்டன. அந்தத் தந்திகளின் குவியல்கள் பிரதமர் அலுவலகத்தை அசைத்தன. நெருக்கடி நிலை காரணமாக மத்திய அரசினருக்கும் கழகத் திற்கும் இடையே உறவு குலைந்து எந்த நேரத்திலும் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற நிலைமை. அப்போது கூட 6-1-76-இல்