உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 513 அவர்கள். 'வள்ளுவர் கோட்டத்தை அவரது திருக்கரங்களால் திறக்கிறார் என்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்ற போது என்னைச் சந்திக்கக் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந் தார். அந்தப் பெருமகனாரின் பாதம்பட்ட என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடி பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று நான் அடைகிறேன், அவர் அவர் கோட்டம் திறக்க வருவது கண்டு! எ " திறப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர், தமிழ் மக்களிடத்தில் ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் கே.கே.ஷா அவர்களாவார்கள். அவர்கள் மனந்திறந்து பேசக்கூடிய பண்பாளர். தன் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்களான கே.கே" என்பதைக்கூட 'கலைஞர் கருணாநிதி ஷா என்றும் இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழையாகப் பொழிந்தவர். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்" என்ற குறள் நெறிக்கேற்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும் மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்பு விழா நடத்து வதும் சாலப் பொருத்தமுடையதாகும். 1.1 என் இனிய உடன்பிறப்பே! "இன்றைய செய்தி நாளைய வரலாறு கோவையல்ல. என்பதும் வெறும் சொல்லழகுக் செய்திகள்தான் வரலாற்று வரிகளாக மாறுகின்றன. என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவதில்லை. இன்றைய என்பதால் எல்லாக் குழந்தைகள் நாளைய தலைவர்கள் குழந்தைகளுமே தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தான் தலைவர்களாகிறார்கள். நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக் காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவர்கள், மண் மீட்கும் போரிலே களத்தில் நின்றபோது மகாத்மாவின் மடியில் தவழ்ந்த இளங்குழந்தை இந்திராதான் இன்றைய இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர்!