உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி533 விழாவில் அவர் தமிழக அரசைப் பாராட்டிப் பேசியிருக்க மாட்டார். மத்திய அரசின் விருப்பத்திற் கொப்ப, அங்கே தயாரிக்கப்பட்ட அறிக்கை இங்கே அனுப்பப்பட்டு கவர்னரிடம் அதற்குப்பிறகு கையெழுத்து பெறப்பட்டது. அந்த அளவிற்கு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்காக அன்றைக்கே அவசரம் அவசரமாக இரண்டு பேர்களை கவர்னரின் ஆலோசர்களாக மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசில் பெட்ரோலியம் இலாகா செயலாளராக இருந்த பி.கே. தவே அவர்களையும், மின்சார இலாகா செயலாளராக இருந்த ஆர்.வி.சுப்பிரமணியம் அவர்களையும் கவர்னரின் ஆலோசகர்களாக மத்திய அரசு அறிவித்தது. அமைச்சரவை கலைப்பு பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது நான் விடுத்த அறிக்கை வருமாறு: அண்ணா "தமிழ்நாட்டு மக்கள் காந்திய வழியிலும், வழியிலும் நிரம்ப நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே அமைதி காப்பதிலும் வன்முறைகள் ஒருசிறிதும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்வதிலும் கடமை, கண்ணியம், கண்ணியம், கட்டுப்பாடு உணர்வுடன் தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒன்பதாண்டு காலம் கழக ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக மக்களுக்கும். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." குடியரசுத் தலைவர் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த பதினான்கு நாட்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கவர்னரின் ஆலோசனையின் பேரில் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த சகோதரர் அரங்கண்ணல் அவர்களும், மாநில திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த கே. கே. ஏ. மதியழகன் அவர்களும், குடிநீர் வாரியத் தலைவராக இருந்த செ. கந்தப்பன் அவர்களும், சுற்றுலா வளர்ச்சி வாரியத் தலைவராக இருந்த ஆசைத்தம்பி அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். எ நானும் எனது உறவினர்களும் முப்பது கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டதாக ஒரு துண்டு நோட்டீசை அச்சடித்து