உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 புத்தம் பரணங் கச்சாமி சங்கம் சங்கம் சரணம் கச்சாமி! அரசியல் மேதைகளில் ஒருவரான கே.சந்தானம் அவர்கள் 4-2-69 "இந்து" பத்திரிகையில் ஒரு நீண்ட கட்டுரை என்ற எழுதினார். "The Task Before D. M. K. Leaders” தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில் தி.மு.க. தலைவர்களின் முன்னேயுள்ள பணி என்ன என்பதை அவர் குறிப்பிட்டிருந் தார். கட்டுரையின் சில பகுதிகளை இப்போது காண்போம். " . "முதலமைச்சர் திரு.சி. என். அண்ணாதுரை அவர்களின் மறைவு, துரதிருஷ்டவசமான ஒன்றாகும். விவேகமும் செயல் நுட்பமும் நிறைந்த தலைவர்கள் நாட்டிலே மிகவும் குறைவாக இருக்கும்போது திரு.அண்ணாதுரையைப் போன்ற திறமையுள்ள ஒருவரின் மறைவு ஒரு பெரிய தேசிய இழப்பாகும் அவருடை ய ஆழ்ந்த திறமைக்கும் அரசியல் ஆற்றலுக்கும் அறிவுக்கும் உணர்ச்சி வயப்படாத தன்மைக்கும் பொருத்த மான புகழுரைகளை நாடு முழுவதுமுள்ள தலைவர்கள் செலுத்தி யிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் அரசியல் எதிர்காலத்தை சம்பந்தப் படுத்தக் கூடிய பிரச்சினையை உள்ளடக்கிய பெரிய சூழ்நிலை அவருடைய மறைவின் விளைவால் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள தி. மு. க. கட்சியும் வெளியிலே உள்ள அதன் அமைப்பும், பண்டித நேரு அவர் -களின் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி யும் காங்கிரஸ் அமைப்பும் இருந்த நிலையை ஒத்து இருக்கிறது