உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 871 ☐ ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் அண்ணாமலை புரத்திலுள்ள என் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழையும்போது அதிகாரிகள் பட்டாளம் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. வருமானவரி அதிகாரிகள், அவர்களுடன் போலீஸ் பட்டாளம்! ராஜி" என்று எனது மனைவியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். ராஜிடை:ச் காணவில்லை. அந்த அதிகாரிகள் ஏற்கனவே எனக்குத் தெரிந்த அதிகாரிகள்தான். அவர்கள் என்னைப் பார்த்து "நீங்கள் யார் சார்? உங்கள் பெயர் என்ன சார்?" என்று கேட்டார்களே; அந்தக் கேள்வியை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு பகீர் என்கிறது! என்செய்வது; இப்படியெல்லாம் என்னை அவமானப்படுத்த வேண்டுமென்று திட்டம்! அந்த அதிகாரிகளுக்குப் பதில் கூறாமலே மாடிக்குப் போனேன். அங்கே ராஜியை சில பெண் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடைக்குள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கக் கூடுமென்று அப்படி சோதிக்கிறார்களாம். என்னைப் பார்த்ததும் ராஜியும், என் மகள் கனிமொழியும் கதறியழுதவாறு மயக்கமுற்றனர். அதன் பிறகும் இரவு எட்டு மணிவரையிலே 'ரைடு' முடியவில்லை. சே! சில கொள்கைளை அழுத்தமாகச் சொன்னதற்காக சர்வாதிகாரத்தை நேர் நின்று எதிர்த்தமைக்காக-எப்படிப்பட்ட பழிவாங்கும் குணத்தினர் ஒன்று கூடிக்கொண்டு என்னையும் என் குடும்பத்தையும் என் கட்சியின் முன்னணித் தோழர்களையும் எவ்வளவு கேவலப்படுத்தினர் என்பதை இப்போது நினைத்தாலும் இதயம் எரிமலையாகிறது! ஆனால் அந்தச் சோதனைகள், வேதனை களிலும் மிரண்டு போகாமல் தலைநிமிர்ந்து நின்றோமே என்ற பெருமிதமும் ஏற்படத்தான் செய்கிறது. 1976-ஆம் ஆண்டு மையத்தில் நெருக்கடி நிலையின் கடுமை சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது என்றே கூறலாம். 1975-ஆம் ஆண்டு எமர்ஜன்சி பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்ட வடபுலத்துத் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். நாடு தழுவிய அளவில் அப்படி மொத்தமாக அனைவரும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழ் நாட்டில் மிசாவில் கைதான அரசியல்வாதிகள் யாரும் 1976-ஆம் ஆண்டு இறுதிவரையில் விடுவிக்கப்படவில்லை. t அனைத்து டுகளில் இந்தியாவின் நெருக்கடி காலச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிக்கப்படுகிற நிலைமை பரவலாகப் பெருகிற்று. அந்த நிலை, பிரதமர் இந்திரா காந்தியின் மீது உலக