உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 579 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தெரிவித்து பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். "சுயேச்சையான, வெளிப்படையான விவாதத்தின் மூலம் நாட்டில் எதிர்ப்பட்டுள்ள பிரச்சினைகளை நம்மால் தீர்க்க இயலும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளன" என்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கடிதத்தினுடன் எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையையும் இணைத்து பிரதமருக்கு அனுப்பினேன். அதற்குப் பின்னர் டிசம்பர் மாதம் 23 -ஆம் தேதி புதுடெல்லி யில் காங்கிரஸ் ஊழியர்களின் முகாமில் பேசிய பிரதமர் எதிர்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முன்பாக, அந்தக் கட்சி களின் போக்கு பற்றியும் ஆராய வேண்டியுள்ளது என்றார். அதாவது எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வதையும் - பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினை தீரு வதையும்- தனக்கு ஏற்படும் கௌரவக்குறைவு என அவர் கருதினார் என்றே எண்ணிட வேண்டும். ஆனால் அந்த வீம்பு நீண்டநாள் இருக்கவில்லை. 'எமர்ஜன்சி" எனும் சர்வாதிகாரக் கொடுமையாட்சியிலிருந்து பின் வாங்கவே அவர் முனைந்தார். அதற்குமேல் தமது எதேச்சாதிகாரப் பிடிவாதப் போக்கை நாடு தாங்காது எனப் புரிந்து கொண்டார்.