உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நெஞ்சுக்கு நீதி ☐ வெளி விவகாரத் துறை அமைச்சர் தினேஷ் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சவான், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கரன்சிங், தொழில் அமைச்சர் பக்ருதீன் அலி அகமது, வெளிநாட்டு வாணிபத் துறை அமைச்சர் பகத் ஆகியோரைச் சந்தித்து தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை விவாதித்தேன். மத்திய உணவு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் என்னைக் கண்டவுடன் கட்டித் தழுவி வரவேற்று மாநிலப் பிரச்சினைகளைக் கவனமுடன் கேட்டறிந்ததுடன், உடனடியாக பத்தாயிரம் டன் அரிசி தமிழ்நாட்டிற்கு முதல் தவணையாக அனுப்புவதற்கு ஆணை பிறப்பிப்பதாக அறிவித்தார். மேலும் மூன்று சர்க்கரை ஆலை களைத் தமிழகத்தில் ஆரம்பித்திடவும் ஒப்புதல் அளித்தார். மத்திய அரசில் பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர் களையும் சந்தித்ததற்கு நேர்மாறாக இருந்தது துணைப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயுடன் எங்களது சந்திப்பு! அவரைச் சந்திக்க குறித்த நேரத்தில் செல்லவேண்டு மென்றுதான் நானும் மாதவனும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறனும் தமிழ்நாடு மாளிகையிலிருந்து காரில் புறப் பட்டுச் சென்றோம். ஆனால் எதிர்பாராத விதமாக வழியில் போக்குவரத்து இடைஞ்சலினால் ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக மொரார்ஜியின் இல்லத்திற்குச் சென்றோம். எள்ளும் கொள்ளும் முகத்தில் முகத்தில் வெடித்திட எங்களை மொரார்ஜிதேசாய் வரவேற்றது ஒரு மாநில அரசை மத்திய அரசில் உள்ளவர்கள் சிலர் எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கியது. வகுப்புக்குச் சற்றுத் தாமதமாக வந்து விட்ட மாணவனை ஆசிரியர் வெறித்துப் பார்த்துக் கடுமொழி கூறுவதுண்டல்லவா ; அவ்வாறே அன்றைக்குத் தேசாய் நடந்து கொண்டார். "உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது? எனக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே உட்காரச் சொன்னார். முள்ளின் மீது அமர்வதுபோல அவர் எதிரேயுள்ள நாற்காலி யில் அமர்ந்தேன். தமிழ்நாட்டு வறட்சி நிலையை எடுத்துக் கூறி ஐந்து கோடி ரூபாய் முதல் தவணையாக உதவிட வேண்டுமென்று அவரிடம் கேட்டேன். நாங்கள் டெல்லிக்குப் பயணமாக சென்னை விமான நிலையம் சென்றிருந்த போதே, இந்திய கம்யூனிஸ்டு கட்சித்