உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 73 வேண்டுமென்பதையும் கருத்தில் கொண்டுதான் சொல்கிறோம். அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிப்பதால் ஒற்றுமை பாதிக்கப்பட்டு விடாது. நட்பு முறையிலேயே இந்தப் பிரச்சினை தீர்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன்". டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துத்தான் ராஜமன்னார் குழுவாக அரும்பி, மாநில சுயாட்சித் தீர்மானமாகச் சட்டப் பேரவையில் மலர்ந்தது என்பதை நினைவூட்டுகிறேன். அதே கூட்டத்தில் மொழிப் பிரச்சினை குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்தித் திணிப்பைத் தி. மு. கழகம் எதிர்க்கிறது என்பதை உறுதியாக அறிவித்தேன். தமிழ்நாட்டுத் தேவைகளை மத்திய அரசில் உள்ளவர் களிடம் எடுத்துரைத்து உதவிகளைப் பெறச் சென்ற நேரத்தில்- நிருபர்கள் மாநாட்டில் கழகத்தின் மொழி, அரசியல் ஆகிய கொள்கைகளை அழுத்தம் திருத்தமாகக் கூறியதால் விளைவுகள் விபரீதமாகுமோ எனச் சிலர் அஞ்சினர். அரசியல் தெளிவு படைத்தவர்கள் அனைவரும், கழகத்தின் குழப்பமற்ற உறுதியான கொள்கைப் பிடிப்பைப் பாராட்டவே செய்தனர். கட்சிக் நான் டெல்லி சென்றிருந்தபோது, காங்கிரஸ் குள்ளேயே கீறல்கள் விழுந்து--பிளவுகள் தோன்றத் தொடங்கி யிருந்தன. கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா அவர்கள் மொரார்ஜி தேசாய் மீது ராஜ்ய சபையில் ஒரு குற்றச் சாட்டைக் கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி ராஜ்ய சபா உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் பின்வருமாறு மொரார்ஜி தேசாயின் மீது குற்றச் சாட்டுகளை அடுக்கினார். "கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டுக்குப் பின் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் சில சலுகைகளை அறிவித்தார். அதனால் பிர்லாவின் அலுமினியக் கம்பெனிக்கு ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் கிடைத்தது. இது தற்செயலாக நடந்தது அல்ல. தேசாயின் மருமகளும், இரு மைனர் குழந்தை களும் பராய் ஜெனரல் கம்பெனியில் பங்குதாரர்களாய் இருக் கின்றனர் என்பதும், இந்தக் கம்பெனியின் பங்குகளை பிர்லாவின் வேறு இரு கம்பெனிகள் இயக்கி வருகின்றன என்பதும் பூபேஷ் குப்தா கூறியுள்ள புகாராகும். அந்தப் புகாருக்கு மொரார்ஜி தேசாய் பதில் அளிக்கத் தவறி விட்டார். மொரார்ஜி தேசாய் தனது சொந்தக் கணக்கிலிருந்து ஐம்பத்தாறாயிர ரூபாயும், தனது