பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நாலுமுகன் திருமுகத்திற் பிறந்தவன்றான் இவ்வண்ணம் நவிலு கின்றான் மூலமகன் தொடைப்பிறந்த மூடனுமா அவ்வண்ணம் மொழிய வேண்டும்? ஏலமிட மானத்தை எண்ணுகிறான்

  • இழிமகனாய் எதிரி நீட்டும்

காலதனை க் கழுவுகிறான் கடைத்தெருவில் நாய னான் கயவன் ஆனான் கவருமெழில் கண்டுமனங் கலங்கியதால் மயங்கியதால் கயவ னான இவனனைய மடையர் சிலர் இனுமிங்கே இருப்பதனால் மீண்டும் மீண்டும் தவறுபல செய்கின்றார்; தன் மான இனவுணர்வு தழைத்து விட்டால் எவர் வருவார் நமைப்பழிக்க? இடுப்பொடிந்து போகாரோ எதுவுஞ் சொன்னால்? அவ்வினத்தின் அரவணைப்புக் காசையுடன் அலைகின்றான் அதனால் தன்னை எவ்விலைக்கும் விற்கின்றான் எதுசெய்தும் வாழ்கின்றான் இனத்தின் மானம் தெவ்வரிட ம் ുപേ'ൿ திரிகின்றான் தன்னலமே தேடு கின்றான் இவ்வகையான் உடன்பிறந்த நோயானான் எதிரிக்குப் பாயும் ஆனான். 102