பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுபொறுக்கவில்லையே எதைக்கண்டு துடிப்பதடா? அந்தோ இங்கே எதைக்கண்டு கொதிப்பதடா? தமிழர் நாட்டில் பதைக்கின்ற நிலையல்லால் அமைதி யில்லை; பைந்தமிழின் நிலைகாணின் நெஞ்சே வேகும்; மிதிக்கின்ற வழிதேடி வடபு லத்தார். மெல்லமெலப் புகுகின்றார்; இந்தி கொண்டு வதைக்கின்ற வழியமைத்து வருதல் கண்டேன் வடவர் பிடி எத்தனை நாள்? எனத் துடித்தேன் இல்லத்தார் துடிதுடிக்க, மாலையிட்ட இல்லாளும் துடிதுடிக்கப் பெற்ற பிள்ளை சொல்லத்தான் முடியாமல் துடிது டிக்கச் சூழ்ந்த உயிர் அனுவெல்லாம் துடிது டிக்க மெல்லத் தன் உயிர்த்துடிப்பே அடங்கும் வண்ணம் மேனியிலே எரியூட்டிக் கொண்ட தோழர் வெல்லத்தான் மொழிப்போரில் தமைக்கொ டுத்தார் வியப்புமிகும் அத்துடிப்பே இன்றும் வேண்டும் துடிக்கட்டும் உமதுமனம்; தமிழ்மொ ழிக்குத் துளியேனும் பகைவருமேல் தூள்து ளாக வெடிக்கட்டும் அப்பகைமை; தமிழர் நெஞ்சம் விழிக்கட்டும்; இந்திமொழி ஆதிக் கத்தை முடிக்கட்டும் இன்றோடு; கூடி எங்கும் முழங்கட்டும் தமிழ்முழக்கம்; தமிழர் கைகள் அடிக்கட்டும் போர்முரசு; பகைவர் கூட்டம் அலறட்டும் சிதறட்டும் அஞ்சி நின்றே. 25