பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய புலவர் நக்கீரர்

உலக உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்ற உறுபுகழ் பெற்ற பெருமொழி, நம் செந்தமிழ் மொழி. அது, அப்புகழ் பெறுவதற்குக் காரணமாய் விளங்குவன, எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியம் போலும் பேரிலக்கியங்களும், தொல்காப்பியம் போன்ற ஒல்காப்புகழ் கொண்ட இலக்கண நூல்களும் ஆம். இத்தகைய இலக்கிய இலக்கணப் பெருஞ்செல்வங்களைப் பெற்றுப் பேணித்தந்தவர், கடல்கொண்ட மதுரையிலும், கபாடபுரத்திலும், இப்போதைய மதுரையிலும் இருந்து தமிழாய்ந்த புலவர் பெருமக்களாவர். மதுரையில் அமைந்த கடைச்சங்கத்து இருந்து தமிழாய்ந்த பு ல வ ர் க ள் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவர்களுள் தலைமைக்கண் நின்றவர்கள், நக்கீரர், கபிலர், பரணர் என்ற முப்பெரும் புலவராவர். இவர்கள் மூவருள்ளும் முதற்கண் வைத்துப் போற்றப்பெறும் பெருமை உடையாரும், தமிழ்ச் சங்கத் தலைவர் என்ற தகுதிப்பாட்டினை பெற்றாரும் ஆய பெரும் புலவர் நக்கீரர் ஆவர்.

தமிழ் வர்ைத்த புலவர்களுள், பலர், தம் வரலாறு அறியப் பெறுவதில்லை. இயற்பெயர் தாமும் அறியப் பெறாப் புலவர்களும் உளர். அத்தகைய குறைபாடு, நக்கீரர் பால் இல்லை. அவர் பெயர், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என அழைக்கப்பெறுவதினாலேயே, அவர் மதுரையில் பிறந்தவர்; கணக்காயனார் என்பார் தம் அருமை மகனார்; நக்கீரனார் என்ற இயற்பெயர் உடை யார் என்ற

வரலாறுகள் உணர நிற்கும்பேறு நக்கீரர்க்கு உண்டு.

1