பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு, வழிவழித் தமிழ் வளர்த்த குடியிலே வந்த நக்கீரரைப் பெற்றெடுத்த தந்தை இன்னார், அவர் பிறந்து வாழ்ந்த பொன்னாடு இன்னது என்பதை அறியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் பிறந்த குலம் யாது? என்பதை அறியும் வாய்ப்பு கிடைத்திலது. கபிலர், அந்தணர் குலத்தவர் என்பதை, "யானே ப ரி சி ல ள்; மன்னும் அந்தணன்' , 'அந்தணன் புலவன் கொண்டு வந்தனென்,' என்ற அவர் ப ட ல் க ளு ம் (புறம்: 200: 201) 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ (புறம்: 126) என மாறோக்கத்து நப்பசலையார் பாட்டும் அறிவிப்பதுபோல, தன் குலம் யாது என்பதை நக்கீரரோ, அவர் குலம் யாது என்பதை பிற புலவர்களோ அறிவித்தார் அல்லர்,

இவ்வாறாகவும், ந க் கீ ர ர் வேள்வி இயற்றாது, சங்கறுக்கும் தொழில் மேற்கொண்ட பார்ப்பனர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், விசுவப் பிராமணர் குலத்தினர் என்றும் கூறுவர் சிலர். அவ்வாறு கூறுவதற்கு ஆதாரமாய் நிற்பது, 'கொங்கு தேர் வாழ்க்கை ' என்ற குறுந்தொகைச் செய்யுள் பற்றி, இறையனார்க்கும், நக்கீரனார்க்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சொற்போர்க் கதையே ஆகும். அக்கதையே ஆதாரமற்றது. ஆகவே, குடமுடையான் வீழ்ந்தக்கசல் குடமும் விழுந்தவாறுபோல, அக்கதையினை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும் நக்கீரர் கதையும் ஆதாரமற்றது எனத் தள்ளப் படுவதாம்.

தொல்காப்பியம், பொருளதிகாரத்திற்கு உரை கண்ட பேராசிரியர், 'கடைச்சங்கத்தாருள் களவியல் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர்' எனப் பெயர்கூறிப் போற்றி, அவர்கள் 'புலவுத் துறந்து நோன்புடையராதலின் பொய்கூறார்” எனப் புகழ்வதும், 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த, மறைமொழிதான்ே மந்திரம் என்ப"

2