பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மங்கல மகளிர்

புறாக்களின் கூதிர்ப் பரு வ த் து வாழ்க்கைநிலை, கருத்தில் நிற்க, அம்மனையைவிட்டு வெளிப்பட்ட புலவர், அவ்வீதிமனைகளுக்குள்ளாகவே, மிகப்பெரியது என்ற பாராட்டினுக்குரிய ஒரு மாளிகையின் வாயிற்கண் சென்றார். கோட்டை மதில் போலும் சுற்றுச்சுவர் அமையப் பெற்றிருந்ததோடு, மனைக்குள் செல்வாரையும், மனையை விட்டு வெளியேறுவாரையும், கண்காணித்தே அனுப்பும் விழிப்போடு கடமையாற்றும் காவலரையும் கொண்டிருந்தது அம்மாளிகையின் பெருவாயில், புலமை தந்த உரிமையால், அவர்க்கு மட்டும் அவ்வாயில் எப்போதும் திறந்தேயிருக்கும். அதான்ல் அம்மாளிகையுள் உரிமையோடு நுழைந்து, அம்மனை வாழ்க்கை மாண்புகளைப் புலவர் உணர்ந்தார்.

செல்வ வாழ்க்கையில் சிறக்க வாழ்பவர் அம்மனைக் குரியார். கோடைக்கொடு வெப்பமும், கூதிர்க் கடுங்குளிரும், தம்மைப்பீடிக்காவாறு வாழக்கற்ற வளமார்வாழ்வினர்;அவர். கோடைவெப்பம் தம்மேனியைத்தாக்காமை வேண்டின், சந்தனக்குழம்பை மேனியெங்கும் பூசிக்கோடல் வேண்டும் என்பதை உணர்ந்து, சந்தனக் கட்டையையும், சந்தனக் கல்லையும் வாங்கிவைக்க அ வ ர் க ன் தவறுவது இல்லை. சந்தனக்கட்டையும் கல்லும் எங்கும் கிடைக்குமாயினும், சந்தனக்கட்டைகளில், பொதியமலைச் சந்தனக்கட்டையே சிறந்தது என்பதால் அதையேதேடி வாங்கி வைத்திருந்தனர். அதுபோலவே வடபேரிமயத்துக்கிடைக்கும் தூயவெண்ணிறம் வாய்ந்தகல்லே சந்தனக்கற்களிலெல்லாம் தலையாய

38.