பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என் தமிழ்ப்பணி' என்ற தலைப்பில் புலவர் அவர்கள் எழுதிய கட்டுரையில் என் எழுத்துப்பணி தொடரும். குறள்பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் என் எழுத்துப்பணி ஒரளவேனும் முற்றுப் பெறும்’ ஒன்று தம் தமிழ்ப் பணியைத் தொடர வேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால் காலம் இடம் த ர த் த வ றி வி ட் ட த னா ல் முற்றுப் பெறாத நிலையிலேயே அவருடைய எழுத்துப்பணி எச்சமாகவே நின்று போயிற்று காலம் செய்த கொடுமை அது!

தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப் பணிமூலம் தமிழுக்கும் உயர்வு தேடித் தரும் வகையில், எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள், செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல் போல, தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணிசெம்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார்.

அந்த எழுத்துச் சுவடிகளை யெல்லாம் அச்சுவடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று அதன் முதற் கட்டமாக மனையுறை புறாக்கள் என்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம்.

“estarr -ಖ55 மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே'

п