பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை:

யவனர் இயற்றிய = யவன நாட்டவர் செய்த. வினைமாண் பாவை = தொழிலால் மாட்சிமைப்பட்ட பாவை, கை ஏந்து ஐ அகல்- தன் கையில் ஏந்தி இருக்கின்ற அழகிய

அகல். நிறைய நெய் சொரிந்து=நிறையும்படி நெய் வார்க்கப்பட்டு. பரூஉத்திரி கொளீஇய-பெரிய திரிகளைப் பந்தமாகக்

கொளுத்தி வைத்து. குரூஉத் தலை நிமிர் எரி=செந்நிறம் வாய்ந்த தலையினை - யுடைய மேல்நோக்கி எழுந்து எரியும்

விளக்கை. அறுவறு காலைதோறு = நெய்வற்றின காலந்தோறும். அமைவரப் பண்ணி - நெய்வார்த்துத் தூண்டி, பல்வேறு பள்ளி தொறும்=பலவாய் வேறுபட்ட இடங்கள்

- தோறும். பாய் இருள் நீங்க=பரந்த இருள் நீங்கும்படி. பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது = பெருமை பொருந்தின தலைமையினையுடைய பாண்டியன் அல்லது. ஆடவர் குறுகா= குற்றேவல் செய்யும் ஆடவரும் அணுக

முடியாது. அருங்கடி வரைப்பின் =அரிய காவலை உடைய கட்டுக்கள். வரை கண்டன்ன தோன்றல்=மலைகளைச் கண்டாற்போலும்

உயர்ச்சியை உடையவை. வரை சேர்பு=மலைகளைச் சேர்த்து. வில் கிடந்தள்ன கொடிய=வானவில் கிடந்தாற் போன்ற பல வண்ணக் கொடிகளை உடையவை

-5- - 65