பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தத்தில் தொழில் செய்ய வல்லதச்சன், கூறிய சிற்றுளி கொண்டு இரண்டு பக்கமும் ஒரே பருமன் உடையதாக ஆக்கிக் கொண்டு. பின்னர், அவற்றில் இலையும் பூவும் கூடிய கொடி படந்தாற் போலும் சித்திரத்தைச் செதுக்கி வைத்திருந்தான்். க ட் டி லி ன் நாற்புறச் சட்டங்களின் இவ்வழகைக் கண்ணுற்ற புலவர், கட்டிலின் கால்களை. நோக்கினார். அவற்றின் அடிப்பகுதிகள், சூல்முற்றிய மகளிரின் பால்கட்டி வீங்கிய முலைகள் போல் உருண்டு திரண்டு குடமாகக் கடையப்பட்டிருந்தன. குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட பகுதி, மெல்லியதாக உள்ளி புட்டில் என்ற பெட்டி போல் மெத்தெனக் கடையப் பட்டிருந்தது. அக்கால்கள் மீது பொருத்தப்பட்டிருந்தது. பெரிய அளவிலான பாண்டில் என அழைக்கப்படும் வட்டக் கட்டில். மூட்டு வாய்கள் எல்லம் மாட்சிமைபெற அமையப் பெற்றிருந்தன.

நுண்ணிய இழையில் கோர்க்கப்பட்ட முத்துச்சரங்கள், அக்கட்டிலைச் சூழச் சாலேகம்போல, மேல்தட்டில் ஆணி அடித்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. அது, அக்கட்டிலை மேலும் மாட்சிமைப்பெறச் செய்தது. கட்டிலின் தகடு, புலியின் உடல் வரிகள்போலும் வரிகளும், சிங்கவேட்டையைச் சித்தரிக்கும் ஒவியமும் தீட்டப்பட்ட, கச்சு எனும் உறையுள் மயிர்களை நிறைத்துத்தைத்த விரிப்பால் மூடப்பட்டிருந்தது. அதனால் அக்கட்டில் மேலும் அழகுபெற்றது. வேண்டும் தலையணைகளும் ஆங்கு போடப்பட்டிருந்தன. அம்மட்டோ! அம்மெத்தைக்கு மேலாகத்தம் பெடையைப்புணர்ந்து மகிழ்ந்த தனால் மேலும் மென்மையுற்றதான், அன்னச் சேவலின் இறகு மயிர்களைப் பரப்பிவைத்தனர். இறுதியாக அன்னத் தூவிக்கு மேலாக, மாசுபோக, அடித்துத் துவைத்துக் கஞ்சி யிட்ட நூலாடையாம் போர்வையை விரித்துப்போட்டு வைத்தனர். கட்டிலின் மாண்புகண்டு களிகூர்ந்தார் புலவர்.

68