பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன், அவன் கடமையை ஆற்றுகின்றான் என்பதால் புலவர்க்கு ஒருபால் மகிழ்ச்சிதான்், என்றாலும் தேவியாரின் பிரிவுத்துயர் அவருக்குத் து ன் பத் ைத த் தந்துகொண் டிருக்கவே, வேந்தன்முன் துணிந்து சென்று, தேவியாரின் துயர்நிலையைக் கூறி "வேந்தே! நின் பாசறை வாழ்க்கை இப்போது முடிவதாகுக' என்ற வேண்டுகோளை வைத்தார்.

"அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறல் தந்து இன்னே முடிக!தில்; அம்ம! மின்நவில் ஒடையொடு பொலிந்த வினைநவில் யானை நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் கயிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித் தெற்கேர்பு இறைஞ்சிய தலைய நற்பல் பாண்டில் விளக்கில் பருவுச் சுடர்அழல வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப், பின்னர் மணி புறத்திட்ட மாத்தாள் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் புடைவீழ் அந்துகில் இடவயின் தழி.இ வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை அமைத்த கையன் முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரி தரும் வேந்தன் பலசொடு முரணிய பாசறைத் தொழிலே’.

. (166–188)

83