பக்கம்:நெய்தற் கன்னி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 123

நிரைகளிறு இடைபட நெறியாத்த இருக்கைபோல் 5 சிதைவின்றிச் சென்றுழிச் சிறப்பெய்தி வினைவாய்த்துத் துறையகலம் வாய்சூழும் துணிகடல் தண்சேர்ப்ப! புன்னைய நறும்பொழில் புணர்ந்தனை இருந்தக்கால், நன்னுதால்! அஞ்சல்ஒம்பு என்றதன் பயன் அன்றோ! பாயின. பசலையால் பகல்கொண்ட சுடர்போன்றாள், 10 மாவின தளிர்போலும் மாணலம் இழந்ததை? பன்மலர் நறும்பொழில் பழியின்றிப் புணர்ந்தக்கால் சின்மொழி! தெளிஎனத் தேற்றிய சிறப்பன்றோ, வாடுபு வனப்பு ஓடி வயக்குறா மணிபோன்றாள் நீடுஇறை நெடுமென்தோள் நிறைவளை நெகிழ்ந்ததை? 15 அடும்புஇவர் அணிளக்கர் ஆடிநீ மணந்தக்கால் கொடுங்குழாய்! தெளிஎனக் கொண்டதன் கொளை

அன்றோ, பொறை ஆற்றா நுசுப்பினால் பூவிந்த கொடிபோன்றாள் மறைபிறர் அறியாமை மாணாநோய் உழந்ததை?

எனவாங்கு . . 20 வழிபட்ட தெய்வந்தான் வலிஎனச் சார்ந்தார்கண் கழியும்நோய் கைம்மிக அணங்கா கியது போலப் பழிபறந்து அலர் தூற்ற, என்தோழி அழிபடர் அலைப்ப அகறலோ கொடிதே."

வரைவு நீடித்துப் பகற்குறி வந்தொழுகும் தலைவனைத், தோழி, தலைவியது ஆற்றாமை கூறி வரைவு

கடாயது. -

1. உரவுநீர்- கடல்;2. விரவு- கலந்த வீழ்பெடை - விரும்பும் பெண் பறவைகள், 3. அசாவிடுஉம் - இளைப்பாறும். இறைகொள் - தங்க. 4. மும்முரசு, சேர, சோழ, பாண்டியர்க்குரிய முரசுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/125&oldid=590202" இலிருந்து மீள்விக்கப்பட்டது