உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெய்தற் கன்னி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 153

தவலில்தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக் கவறுஉற்ற வடுவேய்க்கும் காமர் பூங்கடற் சேர்ப்ப! முத்துஉறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன்ஆயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள், அத்திறத்து நீ நீங்க அணிவாடி, அவ்வாயம் வித்தத்தால் தோற்றான்போல் வெய்துயர் உழப்பவோ? முடத்தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் இடைத்தங்கக் கண்டவன் மனம்போல நந்தியாள், 10 கொடைத்தக்காய் நீ ஆயின், எறியல்லாக் கதியோடி உடைப்பொதி இழந்தான்போல் உறுதுயர் உழப்பவோ?

நறுவிதாழ் புன்னைக்கீழ் நயந்துநீ அளித்தக்கால் மறுவித்தம் இட்டவன் மனம்போல நந்தியாள், அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு அப்பொருள் 15 சிறுவித்தம் இட்டான்போல் செறிதுயர் உழப்பவோ?

ஆங்கு,

கொண்டு பலர்தூற்றும் கெளவை அஞ்சாய் தீண்டற்கு அருளித், திறன்அறிந்து எழிஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் 20 ஈண்டுக இவள் நலம், ஏறுக தேரே.”

வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவனைத் தோழி, தலைவியது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

1. இவர் - பரந்து தோன்றும்; திமில் - மீன்படகு. ஈண்டி - திரண்டு. 2. அளை - ஆடிப்புரளுதல். 3. தவல் இல் - கெடுதல் இல்லாத, மனச்செருக்குக் குறையாத, கழகம் - சூதாடு களம்; தவிராது - ஆர்வம் குறையாமல்; வட்டிப்ப - உருட்டி:4. கவறு - சூதாடு கருவி. 6. நந்தியாள் - மகிழ்ச்சியில் மிகுந்தவள். 8. வித்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/155&oldid=590232" இலிருந்து மீள்விக்கப்பட்டது