உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெய்தற் கன்னி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இ. புலவர் கா. கோவிந்தன்

பட்டமை கண்டு, "பாண்டி நாட்டில் பேராண்மை வாழ்வதைப் போலவே, பேரறமும் வாழ்கிறது! வாழ்க பாண்டியர் பேராண்மை! வாழ்க அப் பாண்டி நாட்டு அறவாழ்வு!” என வாழ்த்தி அகன்றனர். "அரிதினில் தோன்றிய யாக்கை புரிபு, தாம் வேட்டவை செய்து, ஆங்குக்காட்டி, மற்று, ஆங்கே அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றின் ஒன்றன் திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று அணிநிலைப் பெண்ணை மடல்ஊர்ந்து ஒருத்தி 5 அணி நலம் பாடி வரற்கு. ஒரொருகால் உள்வழிய ளாகி, நிறைமதி நீருள் நிழல்போல் கொளற்கு அரியள் போருள் அடன்மாமேல் ஆற்றுவேன் என்னை, மடன்மாமேல் மன்றம் படர்வித்தவள்; வாழி சான்றீர்! 10 'பொய்தீர் உலகம் எடுத்த, கொடிமிசை

மையுறு மண்டிலம் வேட்டனள், வையம் புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும் இன்னா இடும்பை செய்தாள்; அம்ம சான்றீர்! கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ 15 பரந்த கணங்கின் பணைத்தோளாள் பண்பு.

இடிஉமிழ் வானத்து இரவு இருள் போழும் கொடிமின்னுக் கொள்வேன் என்றன்னள், வடிநாவின் வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப், பிறர்முன்னர்க் கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர்! 20 என்றாங்கே,

வருந்தமா ஊர்ந்து மறுகின்கண் பாடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/200&oldid=590277" இலிருந்து மீள்விக்கப்பட்டது