பக்கம்:நெய்தற் கன்னி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 287

மயங்கு.அதர் மறுகலின் மலைதலைக் கொண்டென 5 விசும்புற நிவந்து அழலும் விலங்குஅரு வெஞ்சுரம், இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் அறம்துறந்து ஆய்இழாய்! ஆக்கத்திற் பிரிந்தவர் பிறங்குநீர் சடைக்கரந்தான் அணியன்ன நின்நிறம் பசந்து, நீ இணையையாய் நீத்தலும் நீப்பவோ? 10

கரிகாய்ந்த கவலைத்தாய்க் கல்காய்ந்த காட்டகம் வெருவந்த ஆறுஎன்னார் விழுப்பொருட்கு அகன்றவர் உருவஏற்று ஊர்தியான் ஒள்ளனி நக்கன்ன, நின் உருவிழந்து இணையாய் உள்ளலும் உள்ளுபவோ?

கொதித்து உராய்க் குன்றுஇவர்ந்து கொடிகொண்ட 15

கொடையால் ஒதுக்கரிய நெறியென்னார் ஒண்பொருட்கு அகன்றவர் புதுத்திங்கட் கண்ணியான் பொற்பூண் ஞான்றன்னநின் கதுப்புஉலறும் கவினையாய்க் காண்டலும் காண்பவோ?

ஆங்கு,

அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த 20 பெரும்தண் சண்பகம் போல, ஒருங்கவர் பொய்யா ராகுதல் தெளிந்தனம் மையிர்ஒதி, மடமொழி யோயே!”

பொருள்வயிற் பிரிந்த தலைவனை ಥಿಣ6755 ஆற்றாத தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

1. அயம் - நீர்நிலை; தெரியல் - மாலை; 2. இயங்கு எயில் - திரிபுரம், 3. கணைகதிர்-மிக்க கதிர்களையுடைய ஞாயிறு, தெறுதல் - காய்தல்; காம்புத்தி - மூங்கில் நெருப்பு; தீயும் - அழலும், அதர்மறுகலின் என்க. 5. அதர் - வழி; மறுகலின் - அடைதலின்; ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/289&oldid=590367" இலிருந்து மீள்விக்கப்பட்டது