பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

23

பேராசிரியையிடம் - அதுவும் பல இலக்கிய மேடைகளில் முழங்கும் ஒருத்தியிடம் பேசாமல் இருக்கக்கூடாது என்று நினைத்துப் பேசினான். தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரின் தலைவிதியை நினைத்தபடி கேட்டான். எப்படி?

“மெட்ராஸ்ல...எவ்வளவு காலமாய் ‘குளிக்காமல்’ இருக்கீங்க?”

உதவிப் பேராசிரியைக்குப் புரியாதது, கலாவதிக்குப் புரிந்தது. சிரிப்பை முகமெங்கும் சிதற விடாமல் இருக்க, ஒரு தென்னை மரத்திற்குப் பின்னால் போனாள்.

உதவிப் பேராசிரியை, ‘டிக்னரிபைடாக’க் கேட்டாள்.

“கல்யாணத்துக்கு வந்தீங்களா?”

“ஆமாம். இப்போ இன்னொரு கல்யாணமும் கூடியிருக்கு. நானே ஒங்க வீட்டுக்கு வந்து, நிச்சயதாம்பூலத்திற்குக் கூப்பிட வருவேன். ரெண்டு கல்யாணத்தையும் ஒரே பந்தலுல வைக்கப் போறோம். நான் வேலை பார்க்கிற இடத்துலயே கிடச்சிட்டு. நல்ல இடம். எனக்குத் தெரிஞ்ச இடம். மனசுக்குப் பிடிச்ச இடம். வீட்லயும் ஒனக்கு சரின்னால் எங்களுக்கும் சரின்னுட்டாங்க.”

உதவிப் பேராசிரியை தமிழரசி அதிர்ந்து போனாள்! கடைசியில் இவன். இவர்... காதலிச்சு கல்யாணம் செய்யுறார். நான்தான் ‘பேக்கு’ மாதிரி இவரையே நினைச்சேன்.

தமிழரசி, பதினேராவது வகுப்புக்காரியாகி, தாமோதரனுள் காலேஜ் தாமுவைப்’ பார்த்தாள்—தாபத்தோடு, கோபத்தோடு, வேகத்தோடு, தன்னையே தானே தொலைத்துவிட்ட துயரத்தோடு.