பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நெருப்புத் தடயங்கள்

தாமோதரன், அவள் சொல்வதைப் புரிந்து கொண்டான். ஆக நாளைக்கு மாலை ஆறு மணிக்கு இங்கேயே சந்திப்பு. 'ஒங்களாலதான் முடியாதுன்னு” சொல்லும் போது எப்படி கன்னத்தைக் குவித்து, கண் வீசுறாள்.

அவளிடம் “திருடனா, திருடியா’’ என்றான்

தமிழரசி கலாவதியை கண்களால் சுட்டிக் காட்டி அவனை எச்சரிக்கைப்படுத்தினாள்.

கலாவதி, அவர்கள் கண்ணடி தாங்காமல் தர்ம சங்கடமாகத் தவித்த போது பொன்மணி, புற முதுகைக் காட்டியபடி, எங்கேயோ நோக்கியபோது ‘தொப்பு...தொப்பென்று' சத்தம் கேட்டது. பொன் மணி தவிர, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். வினை தீர்த்தான், ஒரு தென்னை மரத்தின் உச்சியைப் பிடித்து உசுப்பிக் கொண்டிருக்கிறான். கலாவதி, தேங்காய்களை எடுப்பதற்காக எழப்போனாள். அதற்குள் பொன்மணி அங்கே ஒடினாள்.

தென்னை மரத்திலிருந்து கம்பீரமாக இறங்கிக் கொண்டிருந்த வினைதீர்த்தானைப் பார்த்தபடியே "வினைதீர்த்தான் மாப்பிள்ளை மட்டும் எங்க வீட்ல வேலைக்குச் சேரலன்னா, விவசாயமே பார்க்க முடியாதுன்னு அப்பா அடிச்சுச் சொல்றார்’ என்றான் தாமோதரன்.

வினைதீர்த்தானும், பொன்மணியும், தேங்காய்களோடு, ஏதோ பேசியபடியே வந்தார்கள். வந்ததும் வராததுமாய், தேங்காய்களை கும்பமாகச் செதுக்கி, ஒன்றை தாமோதரனிடம் நீட்டியபடியே "சாப்பிடுங்க அத்தான்... ஊருக்கு வந்தால்தானே ஒமக்கு இள நீர் கிடைக்கும்” என்றான். தமிழரசி தலையிட்டாள்.

"இந்த போலீஸ் சாருக்கா கிடைக்காது? நாகர் கோவிலுல தேங்காய்க்குப் பஞ்சமில்ல. எவனாவது கேட்டு கொடுக்காட்டால், அவன்மேல ஒருசெக்க்ஷனை ஏவி விட்டுட