பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நெருப்புத் தடயங்கள்

மில்ல. அது மட்டும் உறுதியான, நான் இதோ இந்த விஷத்தைக் குடிச்சுட்டு ஒரேயடியாய் போயிடுவேன்...’

தமிழரசி திடுக்கிட்டு, அந்த விஷப்பாட்டிலே எடுத்து வீசப்போனாள். பிறகு, வேறு யாராவது அல்லது ஆடோ மாடோ பயன்படுத்தப்படாது என்று நினைத்து, காலால் தரையைத் தோண்டி, விஷத்தைக் கொட்டி மண்ணை மூடினாள். பொன்மணியை அதட்டலாகக் கேட்டாள்:

"பைத்தியக்காரி! இதுக்குப் போயா சாகப்போறே? ஒனக்கு அந்தக் கல்யாணம் பிடிக்கலன்னா, யாருக்கும் பிடிக்கப்படாது. நீ பொண்ணு . ஆடு மாடல்ல ஒன் இஷ்டத்துக்கு விரோதமாய் எதுவும் நடக்காது. நான் பார்த்துக்கிறேன். நான் நிறுத்திக் காட்டுறேன். அதுசரி, ஏன் கல்யாணம் வேண்டாங்கற? யாரையும் காதலிக்கிறியா?”

பொன்மணி தயங்கினாள். 'அதை' தமிழரசியிடம் சொல்லலாமா என்று யோசித்தாள். பிறகு, ஒரு வேளை ‘அதை' அண்ணி பைத்தியக்காரத்தனமான காதலாக நினைத்து, அதற்கு மாற்று மருந்தாக, அவளே தனக்கு நல்லது செய்வதாக நினைத்து, இந்த நாகர்கோவில் கல்யாணத்தை அவசரப்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினாள். படபடப்பான குரலில் “அப்டில்லாம் இல்ல அண்ணி. நம்ம ஊர்ல. நான் காதலிக்கிற அளவுக்கு யார் இருக்காங்க?" என்றாள். அவளின் படபடப்புக் குரலை, தனக்குள் இருந்து இன்னும் முற்றிலும் விடுபடாத தமிழரசி, உறுதிக்குரலாக நினைத்து, அதை உண்மையாக எடுத்துக் கொண்டாள்.

வழிநெடுக குசலம் விசாரித்தவர்களுக்கு பதிலளித்த படியே, தமிழரசி வீட்டுக்குள் வந்தாள். அப்போதுதான். தான் கிணற்றுக்குப் போயும் குளிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. இதை கலாவதியாவது...அவள் கிடக்