பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

57

யில், அவளுக்கு அழுகை வரும்போலிருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு 'என்ன செய்யலாம்?’ என்றாள்.

தாமோதரன், அவளைப் பார்க்காமலேயே பதிலளி தான்:

“என்னaல நெஞ்சு வலியத் தாங்கிக்க முடியும். ஆனaல் முதுகு வலியைத் தாங்க முடியாது. நான் பொன்மணியைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டேன். அந்தக் கனவை வினைதீர்த்தான் கலைச்சிருந்தால்கூட பரவாயில்ல; முடிவையே மாற்றிட்டான். ஒன் சித்தப்பா மகன், கூட இருந்தே குழிபறிச்சுட்டான். எங்க குடும்பம் முழுவதையும் அதில் தள்ளி மூடிட்டான்.”

தமிழரசிக்கு 'சுரீர்” என்றது. அவன் சித்தப்பா மகனா? இப்படிப்பட்ட ஒருவனை சித்தப்பா மகன் என்று சொல்லலாமா? ஆமாம். சித்தப்பா மகன்தான். இல்லையானால், முத்துலிங்கம் அவனை வெட்டிப்போட வேண்டும் என்று சொல்லும்போது, இந்தப் பாழும் மனம் ஏன் படபடக்கிறது? சிறிது குழம்பிய தமிழரசி, தன் மனதைக் கைவசப் படுத்தியவள் போல், படபடப்பாக, உடலாட நின்ற தாமோதரனின் கைகளைப் பற்றியபடியே, மன்றாடும் குரலில் பேசினாள்:

"நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும், அவன் எனக்கு சித்தப்பா மகன்தான். அதுக்காக அவன் செய்த காரியத்தை அதிகமாகவே வெறுக்கிறேன். அதே சமயம் அவனை நீங்க வெட்டிப் போடுறதையும் என்னல் தாங்கிக்க முடியல. ஒங்க குடும்பத்துல ஒருத்தியாய் ஆகப் போகிறவள் என்கிற முறையில, நான் ஒண்னு சொல்லியாகணும். தயவு செய்து என்னைத் தப்பாய் நினைக்கப் படாது. நடந்தது என்னமோ நடந்துட்டு. அதை முறைப் படுத்திப் பார்த்தால் நல்லது. அதுக்கும் மேல ஒண்ணு. எந்தச் சந்தர்ப்பத்திலேயும் நீங்க என்னைக் கைவிட்டுடப் படாது. ஒருவேளை பொன்மணி சொன்னபோதே, நான்