பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

59

கண்ட துண்டமாய் வெட்டணுமுன்னு தோணுது. எங்க அண்ணனைப் பத்தி சொல்ல வேண்டியதில்ல. ஒரு சிலர் முயலுக்கு மூன்று கால்னு சாதிப்பாங்க. ஆனால் இவரோ, பிறத்தியார் முயலுக்கும் மூணு கால்தான் இருக்கணுமுன்னு ஒவ்வோரு முயலோட ஒரு காலையும் ஒடிக்கிற டைப். அவர்கிட்ட சுத்தி வளைச்சுத்தான் பேசணும். எப்படியோ விஷயத்தை நல்லதோ கெட்டதோ அதன் போக்கில வி ட் டு ட ப் போறேன். வினைதீர்த்தானைக் கொன்னாலும் தப்பில்ல.’’

தமிழரசியும், தாமோதரனும் மேற்கோண்டு பேசாமல், தங்களுக்குள்ளேயே தத்தளித்துக் கொண்டிருந்தபோது, முத்துலிங்கம் பாய்ந்து வந்தார். வந்த வேகத்திலேயே, பைக்கை உதைத்தபடி "செறுக்கிமவன். நம்ம தங்கச்சியை ஆத்துல குலத்துல தள்ளிடுவான்னு நினைக்கேன். ஏன்னால், அவள் போட்டிருந்த கம்மலைக்கூட கழற்றி மேஜையில வச்சுட்டு, அவன்கூட மொட்டையாய் ஒடிட்டாள். மேஜைமேல கம்மலைப் பார்த்த பிறகுதான் எங்களுக்கு சந்தேகமே வந்தது.”

‘வெறுங்கையோட போறவளை... இந்த செறுக்கி மவன் எத்தனை நாளைக்கு காலம் தள்ளுவான்? அவள் எக்கேடும் கெடட்டும். கடைசியில வேலைக்காரன்கிட்ட பொண்ண விட்ட குடும்பமாய் போயிட்டோம் பாரு. எல்லாம் ஒன்னால வந்தது. நீ ஊருக்கு வரும்போதெல்லாம் அவள் மேல உயிரை விட்டே. அவள் எல்லாரையும் பந்தாடிட்டாள். நீயும் வீட்டுக்கு வந்தோம் வீட்லயே இருப்போமுன்னு நினைக்கியா? ஒன் புத்திதானே ஒன் தங்கச்சிக்கும் இருக்கும்...”

தாமோதரனும், இதுவரை எதிர்த்துப் பேசியறியாத அண்ணனை சூடாகக் கேட்டான்: