பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

61

காக்காக்கூட்டம் துரத்திக் கொண்டிருந்தது மைனாக் குருவி ஒன்றுக்கு, பூனை ஒன்று பதிபோட்டுக் கொண் டிருந்தது.

அந்தக் கருகிய மாலைப்பொழுதில், அவள் நடந்ததை உருவகப்படுத்துவதற்கு நிற்பது போல் நின்று, அதை நினைக்கப்படாது என்பதுபோல், வேகவேகமாய் நடப்பது போல் நடந்து, கடந்த ஒரு சில தினங்களாக, தன் உள்ளத்திலும், உடம்பிலும் செங்கோலோச்சிய அந்த இனிமை யான உணர்வுகளே, இப்போது கொடுங்கோல் ஆதிக்கம் புரிய, தட்டுத்தடுமாறி நடந்தாள்.

வினைதீர்த்தான் செய்த துரோகச் சுமையோடும், அவனை முத்துலிங்கம் சொல்லுக்குச் சொல் வேலைக்காரப் பயல்’ என்று சொன்னதால் ஏற்பட்ட சுயமரியாதைக் குறைவோடும், இதற்குக் காரணமான சமூக நெறிகளை நெறிக்க வேண்டும் என்ற ஆவேசத்துடனும், கடைசியில் சித்தப்பா மகன், எல்லோரையும் பைத்தியமாக நினைத்து, பைத்தியக்காரத்தனத்தை செய்து விட்டானே என்ற வெறுப்போடும் நடந்தாள். அதேசமயம், இப்போதுதான் பழகிய தாமுவை, தன்னல் பிரிய மனமில்லை. அவர்கள் எவ்வளவுநாள் பழகினர்களோ, எப்படிப் பழகினர்களோ என்ற மனக் கணக்கைப் போட்டுப் பார்த்தாள். முடிவும். “சைபர்' போல் தலைச்சுற்றாகியது.

தமிழரசி ஊருக்குள் வந்தபோது, மங்கிய நிலா வெளிச்சத்தில், ஊரார் கூட்டங்கூட்டமாக நின்று, கிசு கிக்ப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்துவிட்டு, சிலர் தமது கூட்டங்களில் இருந்து கட்சி மாறி அவளிடம் வந்தார்கள். “பொன்மணி குலுக்கும் போதே தெரியும். கடைசியில் அவளுக்கு வேற ஆம்புள கிடைக்காமல், இந்த அப்பாவிப் பயதான் அகப்பட்டிருக்கான்” என்றவர்கள், அவளை தாமோதரன் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவளாகக் கருதி, "அறியாத பொண்ண,.