பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

நெருப்புத் தடயங்கள்

சித்தப்பாவையோ, என் தங்கச்சியையோ நீ துரத்த முடியாது.”

பகவதியம்மாள் பரபரத்தாள். ராஜதுரை சீறப் போனான். பைத்தியாரத் தர்மரோ அண்ணன் மகள் கழுத்தைக் கட்டிக்கொண்டு "என் மவளே... என் மவளே... நான் ஒரு பாவமும் அறியலியே மவளே’’ என்று பூமி பிளக்கப் புலம்பினார்.

7

சொந்த மகளாக நினைத்த தன்னை. இப்போது தாயாக நினைத்து சித்தப்பா மாடக்கண்ணு, குழந்தையைப் போல் மன்றாடி அழுவதைப் பார்த்த தமிழரசி, திக்கு முக்காடிப் போனள். வாயதிரப் பேசியோ, கையுயர ஆட்டி அசைத்தோ பேசியறியாத அந்தப் பெரியவர், குழந்தையாய் கேவியதும், தமிழரசி கிட்டத்தட்ட பாட்டியானாள். சித்தப்பாவின் துண்டையெடுத்து, அவர் கண்களைத் துடைத்தாள். என்ன சித்தப்பா. இது என் வீடும் இல்ல. ராஜதுரை அண்ணன் வீடும் இல்ல. இது ஓங்க வீடு. அவன் ஏதோ தெரியாத்தனமாய் சொல்லிட்டான்...” என்றாள்.

மாடக்கண்ணு தமிழரசியை நிமிர்ந்து பார்த்தபோது, ராஜதுரை அருவருப்பாக முகம் கழித்தான். பகவதியம்மாள் புருவத்தை உயர்த்தியபடியே பார்த்துக் கொண்டிருந்தாள். கலாவதி, ஒவ்வொருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராஜதுரை தற்செயலாக இருமியது, கர்ஜனைபோல் கேட்டது. இருமலுக்கிடையே பொருமினான்.

யோ! நீயா போறியா, நானத் தள்ளணுமா?"