பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

73

படியே “நான் சொல்றது. அத்தனயும் சத்தியம். என்னை யாரு நம்புனாலும் நம்பாட்டாலும் பரவாயில்ல தமிழு. ‘நீ சொல்றத நம்புறேன்’னு ஒரு வார்த்தை சொல்லுக்கா... ஒரே ஒரு வார்த்தை’ என்று கேட்டாள். இதை பலவந்தமாகக் கருதிய தமிழரசியும், எரிச்சலோடு பதிலளித்தாள்.

‘நான் இந்த ஊர்ல குடியிருக்கல. என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம். நான் யாரையும் நம்பத் தயாராய் இல்ல. நீ கூடத்தான் அன்றைக்கு 'பொன்மணி வரமாட்டாள்னு’ என்கிட்டயே ஒரு மாதிரி சொன்னே...”

கலாவதி, தமிழரசியை நிமிர்ந்து நோக்கினாள், எதிர் பாராத அதிர்ச்சி. தனக்கு எதிராகத் தானே பேசுவது போன்ற பிரமிப்பு. எதை ஆதாரமாக நினைத்தாளோ, அதுவே அவளைத் தள்ளப்போவதைக் கண்ட தவிப்பு. எந்த முகத்திற்காக, பழிசொன்ன முகங்கள் லேசாக சுழிக்கும் படிகூட பேசாமல் நின்றாளோ, அந்த முகமே மாறுபட்ட முகமாய் மாறியதைக் கண்ட இயலாமை. என்றாலும், அதிர்ச்சி, த வி ப் பு, தாட்சண்யம் தேவையில்லாத நிர்மலம், இயலாமை ஆகிய அனைத்தும் அவளை, அவளே இனங்கண்டறிய முடியாத ஒரு கூட்டுப் பொருளாக்கியது. தலையை கம்பீரமாக உயர வைத்தது. உடம்பை உறுதிப் படுத்தியது. தந்தையின் கைகளை இழுத்துக்கொண்டு, அவளை அந்த வீட்டில் இருந்து போக வைத்தது.

தந்தையை பலவந்தமாக இழுத்தபடி, கம்பீரமாக நடந்துபோன கலாவதி, தமிழரசி கண்படும் முனையில் சிறிது நின்றாள். அவளை நிமிர்ந்து நோக்கினள். தமிழரசியோ, அவற்றைப் பார்க்க முடியாமலோ அல்லது விரும்பாமலோ வேறுபக்கம் திரும்பிய போது, கலாவதியின் பேச்சு. அவள் காதில் ஒலித்தது.