பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

75

போட்டுக்கொண்டாள். வெளியே சத்தம் கேட்டது. அப்பா அ ப் போ து தா ன் வந்திருக்க வேண்டும். தாமோதரன் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக, போலீஸ் நிலையம் போய்விட்டுவந்த கதையை, மகனிடம் சொல்லிக், கொண்டிருந்தார்.

"எங்க பொறுப்புல ஒப்படைச்சிடுங்க, பெண்ணை ஓங்க கிட்ட ஒப்படைக்கதும், அந்தப் பயலை கைய காலேக் கட்டி ஓங்ககிட்ட ஒப்படைக்கிறதும் எங்க பொறுப்புன்னு. போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டாங்க. தாமோதரன் மாப்பிள்ளைக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா? இவரும், சப்-இன்ஸ்பெக்டரும் இங்லீஸ்ல பேசிக்கிட்டாங்க... என்னென்னு புரியல... அவங்க பேசுனதைப் பார்த்தால் ஏதாவது நடக்கும் ’’

“ஒம்ம தம்பி, மகளோட இங்க வந்திருந்தாரு.”

“அந்தப் பாவிப் பயல என் தம்பின்னு சொல்லாதடா. அவன் உடன் பிறந்தே கொல்லும் நோய். சொந்த அண்ணன்கிட்ட நிலத்தை விற்காமல், தெக்குத் தெருக்காரன் கிட்ட நிலத்த வித்துட்டு, அவனை நமக்கு நிரந்தர பகையாளியாய் ஆக்குன பயல், அவன் எனக்கு தம்பியில்ல. அதுவும் அவன் மகன். இப்படிப்பட்ட ஒரு. காரியத்த செய்த பிறவு, இவன் எனக்கு கெளரவங்க மாதிரி...”

தமிழரசி உற்றுக் கேட்டாள். லேசாக வந்த தூக்கம் கூட தானகப் போய்விட்டது. போலீஸ் நிலையத்திற்குப் போன தாமோதரன் மேல் சாடுவதா, அல்லது அவன் நிலையில் யார் இருந்தாலும் இப்படித்தான் என்று ஆற்றுப் படுத்துவதா? அடுத்துக்கெடுத்தான் என்று வினைதீர்த்தானை வெறுப்பதா, அல்லது நான்கு நாட்களுக்குள்ளேயே தானே தாமோதரமயமாகும் போது, வினைதீர்த்தானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று நியாயம் கொள்வதா?