பக்கம்:நெற்றிக்கண்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8 நெற்றிக் கண்

சோர்ந்தன. எனினும் அவசரமாக விரைந்து அப்போது அவளையோ அவள் கணவனையோ சந்தித்து விடாமல் தப்பிக்கவேண்டுமென்ற ஆவலும் பரபரப்புமே கால்களை உந்தின. அவன் செய்தது போலவே அவர்களும் வீட்டிற்குப் போய் உணவை முடித்துக் கொண்டு வேறு பொழுது போகாமல் கடற்கரைக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக வேகம் குறைந்து மெதுவான கார் ஒரு விநாடி அங்கு நின்றபின் மறுபடி வடக்கு நோக்கி விரைந்து

விட்டது.

அந்த இரவில் அந்த நிலையில் துளசியையும், அவள் கணவனையும் சந்தித்து அவர்கள் தனிமையைப் பாழடிக் கவோ, தன் மனத்தை வேதனைப் படுத்திக்கொள்ளவோ அவனுக்கு விருப்பமில்லை. மாலையில் ராயபுரம் வாசக .சாலைக் கூட்டத்திற்கு அவள் தன் கணவனோடு வந்து உட்கார்ந்திருந்ததே அவனுக்குச் சரியாகப்படவில்லை. துளசியின் பேதமை அவனுக்குப் பிடித்ததென்றாலும் இனியும் அவள் பேதையாக இருப்பதனால் அவளை மணந்து கொண்ட அந்த இன்னொருவர் பாதிக்கப்படலாம் என்னும் உணர்வே அவனை இப்படி எண்ண வைத்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் துளசி சும்மா இருந்தாலும் அவள் அம்மாவோ, அப்பாவோ கூட, 'ஏனம்மா துளசீ ! மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு கடற்கரைப் பக்கமோ ஏதாவது சினிமாவுக்கோ போய்விட்டு வாயேன்! எதுக்கு இப்படி இந்த நாற்காலியே சதமென்று புத்தகத் தைக் கட்டிக்கொண்டு அழுகிறாய்?'-என்று தலையில் பூ வைத்து அலங்கரித்துவிட்டுத் தூண்டியிருக்கலாம். வாழ்க்கை அப்படித் தூண்டப்படுவதுதான். புதிதாக மண மானவர்கள் மேல் எல்லோரும் காண்பிக்கிற பொதுக் கருணை அல்லது பெருந்தன்மை இதுதான் என்பதை அவனால் உணர முடிந்தது.

காரை ஒட்டிக்கொண்டுவந்த துளசி தன்னைப் பார்த்து விட்டாளென்றுதான் அவனுக்குத் தோன்றியது. அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/100&oldid=590471" இலிருந்து மீள்விக்கப்பட்டது