பக்கம்:நெற்றிக்கண்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 1 7

என்பதுதான் பொருத்தமாயிருக்கும். உங்களைப் பொறுத்த வரையில் இதுவரை எல்லாப் பொறுப்பையும் நீங்கள் சரியா கத்தான் நிறைவேற்றியிருக்கிறீர்கள். சொந்த ஊரைவிட்டு இவ்வளவு தொலைவிலுள்ள மற்றொரு நகரத்தில் தனியா, கப் படிக்க வருகிறவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளு. கிற பொறுப்புள்ளவர்கள்ாயிருப்பதே இந்தக் காலத்தில் அபூர்வமாயிருக்கிறது. நம்பிக்கையும் நாணயமுமில்லாத கோழைத்தனமான சில இளைஞர்களைக் காதலித்து ஏமாறு கிறவர்கள் சிலர். உங்களிடம் முறை தவற முயன்ற டாக்ட ரம்மாளின் கணவரைப் போன்ற ஆஷாடபூதிகளிடம் சிக்கிச் சீரழிகிறவர்கள் சிலர். இராவணனைப்போல் பெண்களைத் தூக்கிச் சென்று சிறைவைக்கிற காலமில்லை இது. அதே சமயத்தில் தூக்கிப் போகாமலும் சிறை வைக்காமலுமே பெண்களுக்குக் கெடுதல் செய்யக் கூடிய நாகரிக இராவணர் கள்-இராமர்களைப் போன்ற பாதுகாப்பான பாவனையில் திரிகிற சமூகம் இது. இராவணர்களும்கூட இராமனைப் போல் தோன்றி, நடித்துப் பிறரை நம்பச் செய்கிற கோலம் கொண்டு திரிவதால்தான் இன்று மனிதர்களை நல்லவர்கள் -கெட்டவர்களாகப் பிரித்து இனங்கண்டு பிடிப்பது அருமை பாயிருக்கிறது. வாழ்க்கை எந்த மூலையிலோ அழுகியிரும் பதுபோல் தோன்றுகிறது. ஆனால் எந்த இடத்திலிருந்து அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சரியாகத்தெரிய வில்லை. அரசியலிலா சமூகப் பிரச்னைகளிலா, மதத்திலா, ஒழுக்கத்திலா எங்கு அழுகத் தொடங்கியிருக்கிறதென்பது மட்டும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டுத் உண்மை. இந்த அழுகல் எந்த இடத்தில் தொடங்கி இருக்கிறதோ அந்த இடத்தோடு அப்படியே நின்றுவிடாது. அழுகல் முழுவதும் பரவினால்தான் கெடுதல் என்பதில்லை. அழுக ஆரம்பித்து விட்டது என்பதே கெடுதல்தான். இந்த அழுகலைப் பார்த்து மனம் கொதித்துச் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நியாயத்தையும் உண்மையை ம் அணுக வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் அறிவுத் தொழிலாளிக்கே புரிய நக்ரே தைரியத்தோடு

நெ-8 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/119&oldid=590490" இலிருந்து மீள்விக்கப்பட்டது