பக்கம்:நெற்றிக்கண்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 I

வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று; ஒன்றாயிருந்தது மற்றொன்று-அரும்பாயிருந்: தது பூவாகப் பூப்பதைப் போல, பூத்தபின் அரும்பாயிருந்: தது என்பது ஞாபகம். பூப்பதற்கு முன் இனிப் பூக்கும் என் பது காரியம். அரும்பாயிருக்கிறது-அதனால்-இனிப் பூக்கும்’ என்பது காரணம். காரணத்திற்கும் காரியத்திற்கும் நடுவே ஞாபகம் என்பது ஒரு பாலம். சொல்லும் பொருளும் அரும்பும் பூவும் போல அடுத்தடுத்த விளைவுகள். துளசி' என்று நினைக்கும் போது அந்த நினைவு அரும்பு-அதை யடுத்து அதே வேகத்திலே குமிண் சிரிப்புடனும் துறு துறு வென்று குறும்புத் தனமான அழகுடனும் அந்த வசீகர முகம் "word picture போல அவன் நினைவில் வந்து மலர்கிறதே; அது பூ. அந்தப் பூ இப்பொழுது அவனுக்குக் கிடைக்காமல் வெகு தொலைவில் போய் உதிர்ந்துவிட்ட-அப்படி உதிர்ந்து விட்டதாலேயே அவனை வேதனைப் படுத்துகிற பூவும் ஆகும். -

சிந்தனையிலும் செயலிலும் உற்சாகமின்றி, மனிதன் தனக்குத்தானே சுமையாக உணர்ந்து வேதனையோடு பிடித்துத் தள்ளித் தள்ளிக் கடத்துவதுபோல் கழிக்கும் மந்தமான நாட்களை ஓரிடத்தில் பாரதி தன் கவிச் சொற். களால் முடம்படு தினங்கள் முடமாகிவிட்ட நாட்கள் என்று குறிப்பதைப் போல் துளசியின் திருமணத்தை மறக்க ஓடிவந்து இந்தக் கிராமத்தில் கழித்த நாட்கள் சுமையாக நகர்ந்து நகர்ந்து போனதாகத் தான் சுகுணனும் உணர்ந்திருந்தான். பாரதியின் முழு முழுக் கவிதைகளில் கவிதைத் தன்மையின் சாந்நித்தியம் கொலுவீற்றிருப்பது தவிர இப்படித் தனித் தனிச் சொற்றொடர்களிலும் கூடக் கவிதைத் தன்மை துடிதுடிக்கச் செய்திருக்கும் சொல்லு யிர்ப்புச் சாகஸ்த்தை ஓர் உணர்ச்சிமிக்க-எழுத்தாளன். என்ற அந்தரங்க சுத்தியோடு அவன் பல முறை தனக்குத் தானே வியந்திருக்கிறான். ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/13&oldid=590379" இலிருந்து மீள்விக்கப்பட்டது