பக்கம்:நெற்றிக்கண்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி . 6 9

துளசியும், மாப்பிள்ளையும் கோடைக்கானல் போய் இரண்டு மூன்று நாள் தாங்கி விட்டுச் சனி இரவு அங்கிருந்து புறப்பட்டு ஞாயிறு காலையில் தான் சென்னை வருவதாகக் கேள்விப்பட்டு ஞாயிறு மாலை விருந்துக்கு ஏற்பாடு செய் திருந்தார்கள் அச்சக ஊழியர்கள். இப்போது அவர் களுடைய கோடைக்கானல் பயணம் நின்று போன தகவல் தெரிந்ததும் வெள்ளிக்கிழமை மாலையே விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் அன்றே அவன் தலைமை வகிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள் : சுகுணன் அதற்கும் மறு க்க வில் ைல . துயரமோ, ஏமாற்றமோ, தன்னைக் கோழையாகவோ வாழ்க்கையை விட்டு ஒதுங்கி ஓடுகிறவனாகவோ செய்துவிடக் கூடா தென்று தன் மனத்துக்கே ஒரு பரீட்சைவைக்" விரும்பியவனைப் போல் அந்த திருமணப் பாராட்டுக் கூட்டத்துக்குப் போய்வ்ர ஒப்புக் கொண்டிருந்தான் அவன். x - : * . .

தன்னை வேண்டுமென்றே மிக மிக வஞ்சகமான முறை யில் பழிவாங்குவதற்காகவே அவன் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டு வந்திருக்கிறானோ என்று. துளசிக்கு உள்ளுற ஒருபயம் தோன்றினாலும் தோன்றலாம்: அவனுடைய கதைகளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட சில அன்பர்களின் திருமணங்களுக்குத் தலைமைதாங்க அவன் போயிருக்கிறான். அதைப் போலவே இதையும் ஒரு மேடை நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்து விட்டுத் தன் அந்தரங்க. உணர்ச்சிகளை மனத்திற்குள்ளேயே புதைத்துக் கொண்டு. வந்துவிட அவன்ால் முடியும். ஆனால் இதில் மிக மிதப் பரிதாபத்துக்குரியவள் துளசி தான். விருந்தில் அவன் சாதாரணமாகப் பேசுவதெல்லாம் கூட அவளைக் குத்திக் காட்டிப் பேசுவது போல் அவளுக்குத் தோன்றலாம். அவன் ஒன்றுமே பேசாமல் இருந்தாலோ அதுவும் ஒரு விகல்ப மாகவே தோன்றும். முதலில் அச்சக ஊழியர்கள் அளிக்கும் அந்த விருந்திற்கு அவன் தலைமை வகிக்கப் போகிறான்

நெ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/71&oldid=590440" இலிருந்து மீள்விக்கப்பட்டது