பக்கம்:நேசம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மீசை19


என்னவோ செத்துப்போவது, என்று கேள்விப்பட்டிருந் தானேயொழிய, செத்துப்போனவர்களைப் பார்த்த ஞாபக வில்லை. செத்துப்போனால் பேச்சு மூச்சு இருக்காது. செத்துப்போனவர்கள் திரும்பவும் எழுந்திருக்கமாட்டார் கள் என்று கேள்வி. ஆனால், இப்போது சட்டென்று, பல நாளைக்கு முன் ஒன்று நடந்ததே, அது ஞாபகம் வந்தது. இது மாதிரிதான், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில், கோயில் குளம்-சுற்றி இரும்புக் கிராதி போட்டிருந்தது; அதுகூட இதோ வந் விட்டது- அதன் ஒரு துறையின் படிக்கட்டில் ஏகப்பட்ட பேர் ஒன்றாய்க் கூடி நின்றுகொண்டு, நீரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்துக்கொண்டு, வார்த்தை புரியாமல் இறைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன கப்பலா? திமிங்கிலமா? அந்தக் கூட்டத்திலே இவனும் இடித்துப் புகுந்து கொண்டு, ஒருவனுடைய முழங்கைய்டியில் அரைக்கன நேரம் தெரிந்த சந்து வழியாய், திணறிக்கொண்டு ஒற்றைக் கண்ணைச் சாய்த்த வண்ணம், உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றான். பாதிப்பச்சையேறிய தண்ணீரில் ஒரு வெள்ளை வேஷ்டிக் இஅாப்புளம் (உள்ளே காற்றுப் புகுந்துகொண்டதால் உண்டான கொப்புளம்) மிதந்து கொண்டிருந்தது. பூ: இவ்வளவுதானா? இதுக்கா இத்தனை அமக்களம்! இதை விடப் பெரிய கொப்புளம் இவனால் கடப் பண்ணமுடியுமே! இன்னும் கொஞ்சம் கழுத்திலே சுளுக்கேற, தலையை நீட்டிப் வார்த்தான். வேஷ்டிக் கொப்புளத்தை ஒட்டினாற்போல் ஒரு கைமுஷ்டியும் தென்பட்டது. நெருக்கிக்கொண்டு பார்த் தான். கனத்த மயிர் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/25&oldid=1403449" இலிருந்து மீள்விக்கப்பட்டது