பக்கம்:நேசம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மீசை21


ஜனங்கள் எப்படி எப்படியோ செத்துப்போகிறார்களே! அம்மா அப்படிக் கவிழ்ந்துபடுத்தே செத்துப்போயிருந் தால்...! மீறுபடியும் ந ட க் க ஆரம்பித்தான். இப்போது கொஞ்சம் வேகமாகவே நடந்தான்; கொஞ்சம் பீதியோடு தான். இவன் உள்ளே போவான். பின்னாலேயே இவனுடைய அப்பா, ஆபிஸிலிருந்து வந்து நுழைவார். இவன் காப்பி குடிப்பதற்காக, நேரே சமையல் கட்டிலே புகுவான். தான் பள்ளிக்கூடத்துக்குக் கிளம் புகையில், அம்மா எப்படிப் படுத்துக்கொண்டிருந்தாளோ அப்படியே இப்போதும் கிடப்பாள் இரு கைகளுக்கும் இடையில் கவிழ்ந்த முகத் துடன்தான் கிடப்பாள். "அம்மா! அம்மா! : .e همسر 28, . گشت -- ۶ سس- ح و د؟ خوبی محس است. இவன் 'அம்மா-அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டே, அம்மாவை மெல்லப் புரட்டி நிமிர்த்துவான். - புரட்டி என்ன பிரயோசனம்? வெறுமையே உடல்தான் துவளும்; அன்று ஒருநாள் ஒட்டலிலிருந்து அப்பா வாங்கிக் கொண்டு வந்தாரே அல்வாத்துண்டு, அந்த மாதிரி தளதன. என்று துவளும் . அம்மாவின் உடம்பு ரொம்பவும் மிருது: இது அவனுக்குத் தெரியும். அன்றைக்கு ஒரு தடவை இவனுக்கு வாயில் நுழை யாத பெயருடன் உயர்ந்த ரகமான ஒரு காய்ச்சல் அடித்ததே, அப்போது இவனை மார்மேலும் தோள் மேலும் மடிமேலும் போட்டுக்கொண்டு, சீராட்டினவர் யார்? அம்மாதானே? இனிமேல் சீராட்ட ஒருவரும் கிடையாது. அப்பா உள்ளே வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/27&oldid=1403451" இலிருந்து மீள்விக்கப்பட்டது