பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானப் பிளந்தது. நேரு அருகிலே வந்ததும், அவர் மீது பூமாரி பொழிந்தார்கள். ரோஜா மலரைக் காணிக்கையாக வழங்கினுக்கள். மாலைகளும், செண்டுகளும் மலை மலையாகக் குவிந்தன. நேரு குழந்தைகளையெல்லாம் மனமார வாழ்த் தினர். சிறிது நேரம் பேசினுர். பிறகு, ஒரு வெள்ளைப் புருவைப் பறக்கவிட்டார். உலகத்தில் யுத்தம் என்பதே கூடாது; எல்லோரும் சமாதானமாக வாழ வேண்டும்’ என்பதுதான் நேருவின் கொள்கை. சமாதானத்திற்கு அறிகுறியாகத்தான் வெள்ளைப் புருவை அவர் பறக்கவிட்டார். . அந்தப் புரு விர் . ர் - ர் . . என்று மேலே பறந்து சென்றது. வானத்திலே பல முறை வட்ட மிட்டது. பிறகு, மெல்ல மெல்லக் கீழே இறங்கியது. அப்படி இறங்கி வந்த புரு, என்ன ஆச்சரியம், நேருவின் வெள்ளேக் குல்லாயின் மீது ஜம் மென்று உட்கார்ந்துவிட்டது! அப்போது, குழந்தைகளின் ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா? நேருவின் பிறந்த நாளாகிய நவம்பர் 14-ஆம் தேதிதான் இது நடந்தது. குழந்தைகள் கேட்ட கேள்விகள் ! 'நேரு மாமா, உங்களுக்கு ஆண் குழந்தை களிடம் பிரியம் அதிகமா? பெண் குழந்தைகளிடம் பிரியம் அதிகமா ?” "மாமா, நீங்கள் சிறையிலிருந்து உங்கள் மக ளுக்குக் கடிதம் எழுதினர்களே, அதற்குப் பிறகு நடந்த பெரிய மாறுதல்கள் என்ன, என்ன?”